பிரம்மயுகம் படத்தை ரசிகர்கள் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் மம்மூட்டி.
பிரம்மயுகம்
மம்மூட்டி நடிப்பில் உருவாகி, வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் “பிரம்மயுகம்”. பூதக்காலம் படத்தை இயக்கிய ராஹுல் சதாசிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அர்ஜூன் அசோகன், அமல்டா லிஸ், மற்றும் சித்தார்த் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிர்ஸ்டோ ஸேவியர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நைட் ஷிஃப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. தனது முதல் படத்தைப் போலவே தனது இரண்டாவது படத்தையும் ஹாரர் படமாக உருவாக்கியுள்ளார் ராகுல் சதாசிவன். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 
ரசிகர்களுக்கு வேண்டுகோள்

#Bramayugam Trailer is OUT NOW ! Malayalam : https://t.co/zuX0HDqqKuTamil, Telugu, Kannada & Hindi : https://t.co/q6L8dqIUhl#BramayugamFromFeb15 @allnightshifts pic.twitter.com/jRSTCNNNBg
— Mammootty (@mammukka) February 10, 2024

முழுக்க முழுக்க ப்ளாக் & ஒயிட்டில் எடுக்கப்பட்டுள்ளது இப்படம். மேலும் மம்மூட்டி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் நடிகர் மம்மூட்டி ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
“இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பின் நிச்சயமாக படம் பற்றிய நிறைய ஐடியாக்கள் மனதில் உருவாகி இருக்கும். ஆனால் இப்படம் நிச்சயமாக ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்றாக இருக்காது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புள்ளது” என்றார். மேலும் இப்படத்தின் கதையை ரசிகர்கள் எந்த விதமான முன் தீர்மானங்களும் இல்லாமல் திறந்த மனதுடன் பார்ப்பது படத்தை சரியாக மதிப்பிட முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இப்படம் இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் புதுவிதமான ஒரு அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. 
டர்போ
பிரம்மயுகம் தவிர்த்து மம்மூட்டி நடித்து வரும் மற்றொரு படம் டர்போ. சமீபத்தில் டர்போ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தப் போஸ்டரில் மம்மூட்டி கருப்புச் சட்டையில் முற்றிலும் ரக்கடான ஒரு லுக்கில் காணப்படுகிறார்.
புலி முருகன் படத்தை இயக்கிய இயக்குநர் வைசாக் இந்தப் படத்தை இயக்குகிறார். முன்னதாக மம்மூட்டி நடித்த மதுர ராஜா மற்றும் போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஜோடி கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத் தக்கது. மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி ஃபிலிம் கம்பேனி இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Вся оргтехника в офисе теперь работает без постоянных сбоев благодаря вашим инженерам. Here is my webpage :: https://www.ekasibookings.co.za/author/edwarddinkins5/

  2. Помню, соседка рассказывала. И тогда решили вызвать психиатра на дом. Платный психиатр на дом — Разговаривает, оценивает состояние. Потом подбирают…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed