7 Am Headlines today 2024 april 4th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

இந்தியாவை பாஜக ஆண்டது போதும்.. சமூக நீதி, ஜனநாயகம் நீடிக்க வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி – 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு
இந்தியாவில் ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஆட்சி திமுகவுடையது தான் – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்’
மக்களவை தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி ஏப்ரல் 12ல் தமிழ்நாடு வருகை – நெல்லை, கோவையில் பிரசாரம் செய்கிறார்
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி தாரை வார்ப்பதாக காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வ பெருந்தகை குற்றச்சாட்டு 
தமிழகம் முழுவதும் சி விஜில் செயலி மூலம்  2 ஆயிரம் தேர்தல் புகார்கள் பதிவு – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் 
கழுகுகளை காப்பாற்றக்கோரிய வழக்கில் மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்காவிட்டால் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை 
கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்று பிழையை செய்து விட்டது – தமாகா தலைவர் ஜிகே வாசன் குற்றச்சாட்டு 
சிறுத்தை நடமாட்டம் காரணமாக மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்  ஆகிய 3 பேரும் இலங்கை பயணம் 
மதுரை கள்ளழகர் திருவிழா – கடும் கட்டுப்பாடுகள் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வு – சவரன் ரூ.52 ஆயிரத்துக்கு விற்பனை

இந்தியா: 

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் இன்று நடைபெறுகிறது – பெங்களூரு குடிநீர் பிரச்சினையை எழுப்ப கர்நாடகா அரசு திட்டம் 
33 ஆண்டுகால பயணம் முடிவு – மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் மன்மோகன் சிங்
எல்.முருகன் உள்ளிட்ட 12 பேர் மாநிலங்களவையின் புதிய எம்.பி.,க்களாக பதவியேற்றனர்
இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமித்ஷாவின் பயணம் திடீர் ரத்து
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் – காயங்களை காட்ட ஆடையை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு 
இந்தியா கூட்டணியில் பாதி தலைவர்கள் சிறையிலும், மீதி தலைவர்கள் ஜாமீனிலும் உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமர்சனம் 
விண்வெளி துறையில் நாம் குறிப்பிடத்தக்க சக்தியாக இருக்கிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம் 
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் ஆணையர்களுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

உலகம்: 

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் – 9 பேர் உயிரிழப்பு 
மெக்ஸிகோவில் தேர்தல் பரப்புரையின் போது பெண் மேயர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டதால் பரபரப்பு
அபிதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் சைவ உணவுடன் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சி
பாகிஸ்தானில் 8 நீதிபதிகளுக்கு ரசாயன பொடி தடவிய கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதால் பரபரப்பு

விளையாட்டு: 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல் 
ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா ஹாட்ரிக் வெற்றி 
சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை – கொல்கத்தா இடையேயான ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் 
டிஎன்பிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு – ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4 வரை போட்டிகள் நடைபெறுகிறது
உடற்தகுதி சான்றிதழ் பெற்றார் சூர்யகுமார் யாதவ் – ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகிறார்

Published at : 04 Apr 2024 06:59 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link