சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் தர்ஷினிக்கும் உமையாள் மகன் சித்தார்த்க்கும் கல்யாணம் செய்து வைத்தே தீருவேன் என விடாப்பிடியாக இருக்கிறார் குணசேகரன். அதைத் தடுக்க எவ்வளவோ முயற்சிகளை ஈஸ்வரி எடுத்தாலும் அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி விடுகிறார் குணசேகரன்.
இந்த இடைப்பட்ட வேளையில் சித்தார்த்தை காணவில்லை என உமையாள் குடும்ப டென்ஷனாக இருக்க அம்மாவையும் தங்கையையும் காணவில்லையே என ஜனனி பதட்டத்தில் இருக்கிறாள். அவளை ராமசாமி ஆட்கள் கடத்தி சென்ற போது ஸ்பெஷல் ஆபீசர் கொன்றவை வந்து காப்பாற்றுகிறார். அவர்கள் இருவருடன் கதிரும் சேர்ந்து ராமசாமி கிருஷ்ணாசாமி சகோதர்களை பின்தொடர்ந்து வருகிறார்கள். சித்தார்த்தை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக குணசேகரன் தன்னுடைய குறுக்கு புத்தியை பயன்படுத்துகிறார்.
கதிர் சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கும் இடத்திற்கு சக்தி செல்ல அவனை பின்தொடர்ந்து கரிகாலன் செல்கிறான். சித்தார்த்தை சக்தி அடித்து உமையாளிடம் தைரியமாக பேச சொல்லும் போது, அதை கரிகாலன் அவனுடைய போனில் வீடியோ எடுத்து விடுகிறான். சக்தி தன்னை பின்தொடர்ந்து வந்த கரிகாலனுடன் சண்டை போடுகிறான். இது தான் கடந்த எதிர்நீச்சல் எபிசோட்டில் ஒளிபரப்பான கதைக்களம்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜனனி தன்னுடைய மனக்குமுறலையும், பெண்களை கல்யாணம் என்ற பெயரில் அடக்கிவைத்து அடிமைப்படுத்தும் ஆண்களின் புத்தியையும் எண்ணி புலம்புகிறாள்.
“கல்யாணமாம் கல்யாணம். பொண்ணு வயசுக்கு வந்தவுடனே கல்யாணம். எதிர்த்து பேசுனாலும் கல்யாணம், திறமையை வளத்துக்கொண்டாலும் கல்யாணம், பொண்ணு சோகத்தில் இருந்தாலும் கல்யாணம், சொத்து வருதனாலும் பல்லை இழுச்சிகிட்டு சொந்தம் கொண்டாடும் கல்யாணம். தர்ஷினிக்கு கல்யாணத்தை நடத்திய தீருவேன் என குணசேகரனும், அதை நிறுத்தியே தீருவோம் என நாங்களும் வீதியில் இறங்கி போராடிகிட்டு இருக்கோம். களம் சூடு பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு. எல்லாரும் கொண்டாட தயராகுங்கள் ஆனா இந்த முறை வெற்றி வாய்ப்பு எங்களுக்கு தான் அதிகம்” என்கிறாள் ஜனனி.
ஜனனியின் இந்த ப்ரோமோவை பார்க்கையில் விரைவில் குணசேகரன் ஆட்டம் அடங்க போகிறது என்பது தெரிகிறது. இதுவரையில் அனைவரையும் அடக்கி வெற்றி பெற்று வந்த குணசேகரன் வீழ்ச்சி அடையும் நேரம் நெருங்கிவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. இனி வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட்களில் கதைக்களம் எப்படி மாற போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
மேலும் காண