Fastest Century Mens T20 Namibia Jan Nicol Loftie-Eaton Smashes Record Breaking Hundred 33 Balls Against Nepal | T20 Fastest Century: 33 பந்துகளில் அதிவேக சதம்! டி20 வரலாற்றில் புதிய வரலாறு படைத்த நமீபியா வீரர்

நேபாள முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டி நமீபியா மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே கிர்திபூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. நமீபிய அணி சார்பில் மாலன் கருகர் மற்றும் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் ஆகியோர் அபாரமாக பேட்டிங் ஆடி அணிக்கு பலம் கொடுத்தனர்.
அதிவேக சதம்:
இந்த போட்டியில் நமீபியாவில் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் 33 பந்துகளில் சதம் அடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், டி20 போட்டிகளில் 40 பந்துகளுக்குள் சதம் அடித்த ஏழாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் பெற்றார்.

🚨 RECORD ALERT 🚨Namibian Jan Nicol Loftie-Eaton sets the record for the fastest T20I century off just 33 balls, surpassing the previous record set by Kushal Malla of Nepal. pic.twitter.com/Xo9xPpYteZ
— CricTracker (@Cricketracker) February 27, 2024

இதன்மூலம், 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக 34 பந்துகளில் டி20 சதம் அடித்த நேபாள வீரர் குஷால் மல்லாவின் சாதனையை ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் முறியடித்தார். 2017ம் ஆண்டு 35 பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்திய குஷால் மல்லாவுக்கு அடுத்தபடியாக, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேபோல், இந்திய அணிக்காக டி20 சர்வதேச போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் உள்ளது. 
டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த பேட்ஸ்மேன்:

ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் – 33 பந்துகளில் சதம்(2024)
குஷால் மல்லா- 34 பந்துகளில் சதம் (2023)
டேவிட் மில்லர்- 35 பந்துகளில் சதம் (2017)
ரோஹித் சர்மா- 35 பந்துகளில் சதம் (2017)

இந்த போட்டிக்கு முன், டி20 வடிவத்தில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களில் ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் பெயர் இடம்பெறவில்லை. டி20 வடிவத்தில் அவரது சராசரி 15.72 ஆக இருந்தது. மேலும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும், இன்றைய போட்டியில் 33 பந்திகளில் சதம் அடித்து ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 

Jan Nicol Loftie-Eaton has just hit a T20I hundred off 33 balls. pic.twitter.com/qSQj4Aw45U
— Bertus de Jong (@BdJcricket) February 27, 2024

ஜான் நிகோல் லோப்டி ஈட்டன் 36 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார். இந்த அதிரடி சதத்தின் உதவியால் நமீபிய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் மலான் கருகர் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்தார். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய நேபாள அணி 18.5 ஓவரில் 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் முதல் டி20 போட்டியில் நமீபியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முத்தரப்பு டி20 தொடர்: 
நேபாளம் மற்றும் நமீபியாவுடன், நெதர்லாந்தும் நேபாள T20I முத்தரப்பு தொடரின் ஒரு பகுதியாகும். இறுதிப் போட்டிக்கு முன் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா 2 போட்டிகளில் விளையாடும். இறுதிப் போட்டிக்கு முன் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 27ஆம் தேதி (இன்று) தொடங்கிய இந்தத் தொடர் மார்ச் 5ஆம் தேதி வரை நடைபெறும். மார்ச் 4ம் தேதி போட்டி இல்லை. இறுதிப் போட்டி மார்ச் 5ம் தேதி நடைபெறும் நிலையில், ஒரு நாள் இடைவெளி இருக்கும். 

Source link