Lok sabha election 2024 Congress mp Thirunavukkarasar expressed is worry over party | Thirunavukkarasar: ”நான் எம்.பி., ஆகக்கூடாது என முயன்றவர்களுக்கு நன்றி “


Lok sabha election 2024: காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் தான் எம்.பி., ஆகக்கூடாது என சிலர் முயற்சித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு:
திருநாவுக்காரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “  தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனக்கு சீட் ஒதுக்காதது தொடர்பான அதிருப்தியை திருநாவுக்கரசர் வெளிப்படையாக தெரிவித்ததன் மூலம், அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற விஜயதாரணி, பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 
அறிக்கை விவரம்”
அந்த அறிக்கையில், “இந்தியாவிலேயே காங்கிரஸ் வேட்பாளர்களிலேயே அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த திருச்சி பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு என் நன்றியை மீண்டும் காணிக்கையாக்குகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் பாதிப்புகுண்டான சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீங்கலாக எனது நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து சுமார் 17 கோடி ரூபாய் மக்களின் நலனுக்காகவும் மக்கள் மற்றும் இத்தொகுதியில் செலவிடப்பட்டுள்ளது.
கொரோனா கால தடங்கல் காலம் தவிர்த்து மற்ற காலங்களில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் எல்லா பகுதிகளுக்கும் சென்று மக்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்றதோடு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிகழ்ச்சிகள் உட்பட அரசு மற்றும் பல பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளேன். தொல்லியல் துறையை தமிழக மாநிலத்தில் இரண்டாகப் பிரித்து திருச்சியை மையமாகக் கொண்டு 20 மாவட்டங்கள் உள்ளடக்கிய மண்டல அலுவலகத்தை கொண்டு வந்துள்ளேன்.
ஸ்மார்ட் சிட்டி, தொழில்நுட்ப பூங்கா, புதிய இணைப்பு ரயில்கள், புதிய விமான சேவைகள், புதிய பேருந்து நிலையம், குடிநீர் வடிகால் பணிகள் இப்படி பல பணிகள் நடைபெற குரல் கொடுத்தும், துணை நின்றும் செயல்பட்டுள்ளேன். திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் வர பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற மத்திய மாநில அரசுகளின் ஆயிரக்கணக்கான கோடிகளில் மேற்கொள்ளப்பட்ட பல வளர்ச்சிப் பணிகளில் எந்த லஞ்ச லாவன்யங்களிலும் நான் ஈடுபடாமல் பணிகள் நிறைவேற்றப்பட துணை நின்று ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன்
67 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் 53.4 லட்சம் மதிப்பிலான 47 நான்கு சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கி, இந்தியாவிலேயே எங்கும் எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் செய்யாததை செய்துள்ளேன். மாணவ, மாணவியர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிகளுக்கு டெஸ்க் பெஞ்ச், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்றவற்றை வழங்கியுள்ளேன். இப்படி மனச்சாட்ச்சிக்கு விரோதம் இல்லாமல் வாக்களித்த மக்களுக்கு முழுமையாக பாடுபட்டுள்ளேன். பாராளுமன்றத்தில் 70 சதவிகித வருகைப் பதிவோடு, 37 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். ஜீரோ அவர் விதி எண் 377 மற்றும் 354 வினாக்கள் 4 தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளேன்” என தான் எம்.பி., ஆக இருந்து செய்த நலப்பணிகளை திருநாவுக்கரசர் பட்டியலிட்டுள்ளார்.

மேலும் காண

Source link