Schools Leave: 7 மாவட்ட பள்ளிகளுக்கும் 3 மாவட்ட கல்லூரிகளுக்கும் விடுமுறை: கொட்டித் தீர்க்கும் கனமழை.. இன்னும் இருக்கு!

வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததைப் போல் சென்னை மட்டும் இல்லாமல் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகின்றது. இதனால் மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அதாவது ஜனவரி 8ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது. மற்ற அரசு அலுவலகங்களும் பொது சேவை நிறுவனங்களும் வழக்கம்போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இதுமட்டும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
கொட்டித்தீர்த்த கனமழை விபரங்கள்
வானிலை ஆய்வு மையம்  கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரித்தது. இதன் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று மாலையில் பெய்துவரும் கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் 21.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

]]>

Source link