Meteorological Center has predicted that Tamil Nadu may face heat wave due to maximum temperature 8th april 2024


தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மறுநாள், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 11ஆம் தேதி, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்ரல் 12 ஆம் தேதி, தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.    
ஏப்ரல் 13 ஆம் தேதி மற்றும் 14 ஆம் தேதி, தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:
08.04.2024 முதல் 12.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை  2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
இன்று: (ஏப்ரல் 8 ஆம் தேதி)
அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3° – 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில  இடங்களில் 2° – 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும்.
அதிகபட்ச  வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் 40°– 41° செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°–40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை: அதிகபட்ச  வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில்  2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக  இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
08.04.2024 முதல் 12.04.2024 வரை:
அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக பட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் மற்றும்   சேலத்தில் 41.6° செல்சியஸ், வேலூரில் 41.3° செல்சியஸ், நாமக்கல்லில் 41.0° செல்சியஸ்,  தருமபுரி  மற்றும்   திருச்சியில் 40.7° செல்சியஸ், திருத்தணியில் 40.4° செல்சியஸ், தஞ்சாவூர்   மற்றும்   கரூர் பரமத்தியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மதுரை விமான நிலையம், சென்னை மீனம்பாக்கம் மற்றும்   கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 39.0° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
 
 

மேலும் காண

Source link