Chengalpattu District Consumer Court Imposes A Fine Of Rs.50 Thousand On Paranur Toll Booth For Charging Extra Fee

கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி என்பது மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், பிற சாலைகள் என்றும் தரத்துடன் அமைக்கப்படும். இதனால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமாகிறது.  ஆரம்பத்தில் பொதுமக்களுக்கு,  வாகன ஓட்டிகளுக்கும்  வரப்பிரசாதமாக அமைந்த, இந்த சுங்கச்சாவடிகள் வாகனங்கள் பெருக  தலைவலியை உருவாக்கியது.   சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்க கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.   ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தக்கூடிய ஃபாஸ்ட் டேக் (fastag ) முறையை   அறிமுகப்படுத்தியது. இந்த முறை மூலம்  காத்திருக்காமல் வேகமாக செல்வதை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனையால், ஃபாஸ்ட் டேக் வேலை செய்யாமல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் அவ்வபோது குற்றச்சாட்டை முன் வைத்தும் வருகின்றனர். அதுபோன்ற சமயங்களில் இரண்டு மடங்கு பணம் நேரடியாக வசூலிக்கப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை   முன் வைக்கின்றனர். 
 

செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி – Paranur Toll Plaza

 
 
 செங்கல்பட்டில் ஒரு சம்பவம்
 
செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் தனசிங். இவருக்கு சொந்தமாக ஒரு டெம்போ வேன் உள்ளது. அந்த அந்த டெம்போ வேனை  வைத்து அவர்  சுய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 29-06-2021 அன்று சேலையூரில் உள்ள ஒரு வீட்டை காலி செய்து அதில் உள்ள பொருட்களை ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்க சவாரி வந்துள்ளது. அதன்படி தனசிங் அன்றைய தினமே தனியார் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் பாஸ்டேக் ரீச்சார்ஜ் செய்துள்ளார்.
 

செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி – Paranur Toll Plaza

 
பரனூர் சுங்கச்சாவடி 
 
பின்னர் சேலையூரிலிருந்து செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி வழியாக கடந்து மண்டபம் சென்று அங்குள்ள வீட்டில் சாமான்களை இறக்கி விட்டு மீண்டும் அவர் வந்த வழியே வீடு நோக்கி வந்துள்ளார். அப்போது பரனூர் சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் வேலை செய்யவில்லை என கூறி இருமடங்கு தொகையை வசூலித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தன்சிங் சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது ஃபாஸ்ட் டேக் நன்றாகவே உள்ளது. இதில் எந்த கோளாறும் இல்லை என விளக்கம் அனுப்பி உள்ளனர். 
 

மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம்

 
 
 செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
 
இதனையடுத்து மன உலைச்சல் அடைந்த தனசிங் பரனூர் சுங்கச்சாவடி மீது செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 06-09-2022 அன்று வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கினை விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் காசி பாண்டியன், உறுப்பினர்கள் ஜவகர், விமலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் ஃபாஸ்ட் டேக்கில் போதிய பணம் இருந்தும் கூடுதல் கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக பரனுர் சுங்கச்சாவடிக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும்,  வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.

Source link