top news India today abp nadu morning top India news April 22 2024 know full details



நாளை சித்ரா பௌர்ணமி.. திருவண்ணாமலைக்கு 2-வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2வது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வெவ்வேறு நட்சத்திரங்களில் வரும். அப்படி சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தினம் எமலோகத்தில் நம்முடைய புண்ணியம் மற்றும் பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திரகுப்தனை அவதரித்த தினம் என கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து நல்ல காரியங்கள் செய்தால் நம் தலைமுறை நற்பலன்களை பெறும். மேலும் படிக்க..

தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினருக்கு 25% மாணவர் சேர்க்கை – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரின் குழந்தைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் 2023-2024 கல்வியாண்டுக்கான இறுதி பருவத் தேர்வுகள் மீது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க..

விண்ணதிர்ந்த பக்தர்கள் கோஷம்.. மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம் தொடங்கியது!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய வைபவமான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. மதுரையில் உள்ள மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவது வழக்கம். இத்தகைய மீனாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் படிக்க..

கலெக்‌ஷன் அமோகம் – கடந்த நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடி நேரடி வரி வசூல் – 17.7% அதிகரிப்பு

கடந்த 2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் முந்தைய ஆண்டை காட்டிலும் 17.7 சதவிகிதம் அதிகம் ஆகும். வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மார்ச் 2024 இல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.19.58 லட்சம் கோடியாக நேரடி வரியாக வசூலாகியுள்ளது. அதாவது இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் முந்தைய ஆண்டை காட்டிலும் 17.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது திருத்தப்பட்ட கணிப்புகளையும் விட அதிகமாக உள்ளது.  2024 நிதியாண்டில் வருமானம் மற்றும் கார்ப்பரேஷன் வரிகளின் நிகர வசூல், நேரடி வரிகளின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. மேலும் படிக்க..

“உங்க சொத்துக்களை பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்திருவாங்க” – பிரதமர் மோடி சர்ச்சை கருத்து!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் மக்களவை தேர்தலானது 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளுப்போவது யார் என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும். அந்த வகையில், முதற்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link