தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வறண்ட வானிலை:

ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஏப்ரல் 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

30.03.2024 முதல் 03.04.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இரணியல் (கன்னியாகுமரி) 2, குளச்சல் (கன்னியாகுமரி) 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல் கரூர் மாவட்டத்தில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 36 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாத்தில் 34.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
puntate roulette francese My website; come capire Se Una slot paga
wettanbieter neu Here is my web site: Basketball over Under Wetten
app für sportwetten Feel free to surf to my web site – basketball Wetten Online
quoten wetten basketball nba (https://www.Graffeoandassociates.com/Der-einfluss-von-sponsoren-auf-die-darts-welt/)
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன? | Is actor Devan, who quit the BJP, joining TVK? What is the reason for meeting Vijay? | ACTPnews.com

"ஏன் நாங்க கோட்-சூட் போடக்கூடாதா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?" – கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா | ACTPnews.com

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: “தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்” – அமைச்சர் ரமேஷ்| Leak of HR&CE Department secrets: “They are spying out of fear of having committed wrongdoing” – Minister Ramesh. | ACTPnews.com

How Much Is Bet On Grand National online grand national free