MDMK Symbol: 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் என்ற தேர்தல் ஆணையம்; சோகத்தில் மதிமுக


மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு பம்பரம் சின்னம்  வழங்க வேண்டும் என மதிமுக கோரிக்கை வைத்திருந்தது. சட்டப்படி 2 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பம்பரம் சின்னம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தது. 
இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பம்பரம் சின்னம் பொது பட்டியலில் உள்ளதா என தெரிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 
சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்து, தேர்தல் அதிகாரிதான் முடிவு எடுப்பார் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து, பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. 
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, ஒரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக கட்சியின் சார்பாக திருச்சி தொகுதியில் வைகோ மகன் துரை மகன் போட்டியிடுகிறார். மதிமுக, தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கு முன் பம்பரத்தில் போட்டியிட்டுள்ளதால், மீண்டும் பம்பரம் சின்னத்திலே போட்டியிட மதிமுக விருப்பம் கொண்டு உள்ளதாக தெரிகிறது. 

மதிமுக கோரிக்கை:
மதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் சட்டமன்றம் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட உள்ளதாகவும், இந்த தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்பது, பிற்பகலில் தெரிய வரும். 

Source link