Manipur High Court Modifies 2023 Order On Meiteis In Scheduled Tribe List


Manipur Case: மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. 
மணிப்பூர் கலவரம்:
தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.
மணிப்பூரில் சுமார் 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது.
இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப்பெற்ற உயர் நீதிமன்றம்
 இந்த நிலையில், மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.  அதாவது, கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு மணிப்பூரில் பெரும் இன வன்முறைக்கு வழிவகுத்தது.  இதனை அடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ” மார்ச் 27, 2023 அன்று பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவின் பத்தியை நீதிமன்றம் நீக்குகிறது.
இந்த உத்தரவு கலவரத்துக்கு வழிவகுத்தது. சட்டத்தின் தவறான எண்ணத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பத்தி  உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் நிலைப்பாட்டுடன் முரணாக இருக்கிறது. எனேவே, முந்தைய உத்தரவை நீக்க வேண்டியது அவசியம் இருக்கிறது” என்று மணிப்பூர் நீதிமன்றம் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்ற பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடுமையாக சாடியது. அதன்படி,  “இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசுக்கு தான் உரிமை உள்ளது. அதில் நீதிமன்றங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் மாற்றவோ, திருத்தவோ அல்லது மாற்றவோ முடியாது.  உயர் நீதிமன்ற வழங்கிய உத்தரவு தவறானது” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க
“எதுக்கு இந்த பெயரை வச்சீங்க?” சிங்கத்திற்கு சீதா, அக்பர் பெயர் – கொல்கத்தா நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மேலும் காண

Source link