CM Stalin: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின்; வெளியான முதல் புகைப்படம்; ஸ்பெயின் தூதர் தினேஷ் கே. பட்நாயக் வரவேற்பு


<p>முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடுக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை ஸ்பெயின் தூதர் தினேஷ் கே. பட்நாயக் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளார்.&nbsp;</p>
<p>ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சை சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தனது அதிகாரப் பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.&nbsp;</p>

Source link