கார்த்தி நடிப்பில் 2013ஆம் வெளியான ‘அலெக்ஸ் பாண்டியன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆகான்ஷா பூரி. அதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ‘பிரைஸ் த லார்ட்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து கன்னடத்திலும் அறிமுகமான பின்னர் தமிழ் சினிமாவில் விஷால் ஜோடியாக ‘ஆக்ஷன்’ படத்தின் மூலம் கதாநாயகியானார்.
பிக்பாஸில் சர்ச்சை :
விநாயகர் என்ற பக்தி சீரியலில் பார்வதி தேவியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஆகான்ஷா பூரி. காலண்டர் கேர்ள்ஸ் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த ஆகான்ஷா பூரிக்கு, அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் குறிப்பாக சக போட்டியாளருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்குக்காக அவர் செய்த லிப் லாக் கிஸ்ஸிங் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காதல் முறிவு :
பாலிவுட் நடிகரும் இந்தி சின்னத்திரை நடிகருமான பரஸ் சோப்ராவை காதலித்து வந்தார் ஆகான்ஷா பூரி. இருவரும் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் பரஸ் சோப்ரா சக போட்டியாளரான மஹிரா சர்மாவை காதலிக்க அவருக்கும் ஆகான்ஷா பூரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பாடு இருவரும் அவர்களின் மூன்று ஆண்டுகால காதலை முறித்து கொண்டனர்.
ஹோலி கொண்டாட்டம் :
இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆகான்ஷா பூரி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆகான்ஷா தான் மேலாடையின்றி ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்து தன் சமூக வலைதள ஃபாலோயர்களை அதிர்ச்சி அடையக் செய்துள்ளார். இந்நிலையில், பக்தி நாடகத்தில் பார்வதி தேவியாக நடித்த நடிகையா இப்படி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் என விமர்சனம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
மேலும் காண