ITR Forms Types of Income Tax Forms Which ITR Form to Choose IT Returns 2024


Income Tax Returns File 2024: வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்காக, வருமான வரித்துறை இதுவரை ITR 1, ITR 2, ITR 3, ITR 4, ITR 5, ITR 6 மற்றும் ITR 7 படிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரி கணக்கு தாக்கல் 2024: 
நடப்பு நிதியாண்டு 2023-24 அல்லது அடுத்த நிதியாண்டு 2024-25க்கான வருமான வரி அறிக்கையை (ITR), வரி செலுத்தபவர்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம். இதற்காக, ITR 1, ITR 2, ITR 3, ITR 4, ITR 5 மற்றும் ITR 6 ஆகிய படிவங்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. இதன் மூலம், ஐடிஆர்-1 முதல் ஐடிஆர்-6 வரையிலான ஆவணங்களை, தற்போது வரி செலுத்துவோர் அணுகலாம். வருமான வரிக் கணக்கை எவ்வளவு விரைவில் தாக்கல் செய்கிறமோ, அவ்வளவு விரைவில் டிடிஎஸ் வடிவில் செலுத்தப்படும் கூடுதல் வருமான வரி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்ணயிக்கப்பட்ட வருமானத்தை விட அதிகமாக சம்பாதிக்கும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும். வருமான வரித்துறை இதுவரை ITR 1, ITR 2, ITR 3, ITR 4, ITR 5, ITR 6 மற்றும் ITR 7 படிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வருமான ஆதாரங்கள், முந்தைய நிதியாண்டில் ஈட்டிய தொகை, முதலீடுகள், துறை போன்ற காரணிகளின் அடிப்படையில் வரி செலுத்துவோர்  தங்களுக்கான சரியான படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். 
யாருக்கு எந்த ஐடிஆர் படிவம் பொருந்தும்?
ITR Form 1: இந்தியாவில்  வசிக்கும் ஒரு தனிநபரின் மொத்த வருமானம் ஒரு நிதியாண்டில் ரூ.50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், ITR 1 படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம், வீட்டு கட்டடத்தின் மூலம் வரும் வருவாய், வங்கிக் கணக்குகளில் இருந்து வரும் வட்டி உள்ளிட்டவை இந்த வருவாயில் அடங்கும்.
ITR form 2: தனிநபர் அல்லது ஒரு இந்து கூட்டுக் குடும்பத்தின் மொத்த வருவாய் 50 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால், அவர் ITR 2 படிவத்தை பயன்படுத்தலாம். நிறுவனங்களின் இயக்குநர்கள், பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள், சம்பளம், ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வருமானம், மூலதன ஆதாயம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தியாவிற்கு வெளியே சொத்துக்கள் அல்லது வருமானம் உள்ள நபர்களுக்கும் இது பொருந்தும்.
ITR form 3: வணிகம் அல்லது தொழிலில் வருமானம் உள்ள தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பம் அல்லது ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பவர்கள் ITR-3 படிவத்தை தாக்கல் செய்யலாம்.
ITR form 4: தனிநபர், இந்து கூட்டுக் குடும்பம், ரூ.50 லட்சத்திற்கும் குறைவான வருமானம் கொண்ட நிறுவனம் (LLP தவிர்த்து) ஆகியவற்றில், வருமான வரி பிரிவுகள் 44AD, 44ADA அல்லது 44AE இன் கீழ் வணிகம் அல்லது தொழில் மூலம் வருமானம் கணக்கிடப்பட்டால் ITR-4 படிவத்தை சமர்பிக்கலாம்.
ITR form 5: LLP மற்றும் தொழில் நிறுவனங்கள் ITR-5 ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.
ITR form 6: வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 11 இன் கீழ் விலக்கு கோராத நிறுவனங்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்த வேண்டும்.
ITR form 7: வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 139(4A), 139(4B), 139(4C), அல்லது 139(4D) ஆகியவற்றின் கீழ் வருமானத்தைத் தாக்கல் செய்யும் நிறுவனங்கள் ITR-7 படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். தொண்டு அல்லது மத அறக்கட்டளை, அரசியல் கட்சி, அறிவியல் ஆராய்ச்சி சங்கம், செய்தி நிறுவனம், மருத்துவமனை, தொழிற்சங்கம், பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும்

மேலும் காண

Source link