தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. பாலிவுட்டில் 2013ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கஃபே” படத்தில் ஒரு துணை நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என அடுத்தடுத்து அனைத்து மொழிகளிலும் அறிமுகமானார். 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் நடித்த படங்கள் :
முதல் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகை ராஷி கண்ணா ஜெயம் ரவியுடன் அடங்க மறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் மற்றும் துக்ளக் தர்பார், தனுஷுடன் திருச்சிற்றம்பலம், சுந்தர். சியின் அரண்மனை 3, அரண்மனை 4, கார்த்தியுடன் சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு நடிகையாக மட்டுமின்றி சில பாடல்களையும் பாடியுள்ளார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ராஷி கண்ணா. விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த ‘ஃபர்ஸி’ வெப் சீரிஸ் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. ஹீரோயினாக இருந்தாலும் சரி செகண்ட் ஹீரோயினாக இருந்தாலும் சரி தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகக் கொடுப்பவர். ஹோமிலியாகவும் கிளாமராகவும் நடிக்க தயங்காதவர் நடிகை ராஷி கண்ணா.
மூன்றாவது வீடு :
மிகவும் பிஸியாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா டெல்லியை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஹைதராபாத்தில் அரண்மனை போன்ற பிரம்மாண்டமான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது இவர் வாங்கும் மூன்றாவது வீடாகும். புது வீட்டில் நடத்தப்பட்ட பூஜை, ஹோமம் சடங்கில் அவரின் உறவினர்கள் கலந்து கொண்டு ராஷி கண்ணாவை வாழ்த்தினார்கள். இந்த பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.58 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பல கோடி சொத்துக்கள் :
ஏற்கெனவே ஹைதராபாத்தில் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார் நடிகை ராஷி கண்ணா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு மும்பை மற்றும் டெல்லியிலும் வீடுகள் உள்ளன எனக் கூறப்படுகிறது. 33 வயதாகும் ராஷி கண்ணா அதற்குள் பல கோடி சொத்துக்களை சேர்த்து கெத்து காட்டுகிறார். அவரின் இந்த வளர்ச்சியை பார்த்து ஆச்சரியப்படும் அவரின் ரசிகர்கள் சோசியல் மீடியா மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா அவ்வப்போது போட்டோஸ் போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பார். அவர் எந்த போஸ்ட் போட்டாலும் ரசிகர்கள் ஹார்ட்டின்களை குவித்து விடுவார்கள்.
Published at : 05 Apr 2024 07:43 PM (IST)
மேலும் காண