Sandeshkhali Case: சந்தேஷ்காலி விவகாரம்.. ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்.. கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி!

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது. இதனால், அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதற்றத்தை ஏற்படுத்தும் சந்தேஷ்காலி விவகாரம்:

பெண்களின் இந்த போராட்டம், நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது. இதுதொடர்பாக மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மைக் கண்டறியும் குழு சந்தேஷ்காலிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அதில், "சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியதாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளதாக உறுதியாகியது" என்று தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தேசிய பட்டியலின ஆணையம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதில், பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்டம் 338-ன் கீழ் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று கூறியது.

இதற்கிடையே, சந்தேஷ்காலி விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம். தேசிய அளவில் அழுத்தம் எழுந்ததை தொடர்ந்து, நில அபகரப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஷேக் ஷாஜகானின் உதவியாளர்கள் ஷிபர்சாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஷேக் ஷாஜகான் தலைமறைவானார்.

அதிரடி காட்டிய கொல்கத்தா உயர் நீதிமன்றம்:

ஷேக் ஷாஜகானை கைது செய்யாமல் திரிணாமுல் காங்கிரஸ் அரசு பாதுகாப்பதாக பாஜக குற்றம் சுமத்தி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, இந்த விவகாரத்தில் காவல்துறையின் கைகளை நீதிமன்றம் கட்டி போட்டிருப்பதாக விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், ஷேக் ஷாஜகானை மேற்குவங்க காவல்துறை கைது செய்வதை தடுக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. "கைது செய்ய எந்த தடையும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் (ஷாஜகான்) குற்றம்சாட்டப்பட்டவராக குறிப்பிடப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய வேண்டும்" என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 43 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 42இல் குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்யப்பட்டுள்ளன. பழங்குடியின சமூகத்தினரின் நிலத்தை அபகரிப்பது தொடர்பாக, ஏழு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பிப்ரவரி 8 முதல் நில அபகரிப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என நீதிமன்றத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை கேட்ட நீதிமன்றம், "நான்கு ஆண்டுகளாக யாரும் கைது செய்யப்படாதது ஆச்சரியமாக உள்ளது" என தெரிவித்தது.

Source link