Anant Ambani coctail party photos and videos out celebrities like dhoni sachin tendulkar mark zuckerberg are seen on the party


சச்சின் டெண்டுல்கர், தோனி , ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட உலக புகழ்பெற்ற பிரபலங்கள் இந்த காக்டெயில் பார்ட்டியில் கலந்துகொண்டார்கள்.
ஆனந்த் அம்பானி
ரிலையன்ஸ் குழுமத்தின்  தலைவர் முகேஷ்  – நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

கடந்த  மிகவும் பிரம்மாண்டமாக ஜாம்நகர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிட்டத்தட்ட 51 ஆயிரம் மக்களுக்கு தடபுடலாக விருந்து நடைபெற்றது. அம்பானியின் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து விருந்தை பரிமாறினார்கள். இந்த விழாவுக்கு திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், சர்வதேச அளவிலான தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரக தொழிலதிபர் முகமது அல் அப்பார், பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் மற்றும் பல விவிஐபிக்கள் கலந்து கொண்டுள்ளனர். 

A night to remember: Anant Ambani & Radhika merchant pre-wedding bash in Jamnagar Gujarat India..!! 🇮🇳♥️#Rihanna #AnantRadhikaWedding #AnantAmbani #AnantRadhikaPreWedding #Jamnagar #MukeshAmbani #NitaAmbani #AmbaniPreWedding #AmbaniWedding #RadhikaMerchant pic.twitter.com/lt1jrtfGGw
— Neha Bisht (@neha_bisht12) March 2, 2024

ஹாலிவுட் பாப் பாடகர் ரிஹானாவின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த விழா பாலிவுட் பிரபலங்கள் ரன்பீர் கபூர் – ஆலியா பட் ,சல்மான் கான்,ரன்வீர் கபூர், தீபிகா படுகோன்,  ராணி முகர்ஜி,  சோனாலி பிந்த்ரே, நடிகர் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் , கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், சூரியகுமார் யாதவ், ஹிர்திக் பாண்டியா, பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவால் மற்றும் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான காக்டெயில் பார்ட்டி ஒன்றும் நடைபெற்றது. இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த விழா நடைபெற்ற இடத்தின் ஏரியல் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க :  Selvaraghavan: புரிய வேண்டியவங்களுக்கு புரியும் குமாரு! அட்டாக் பதிவிட்ட செல்வராகவன்? குழம்பிய ரசிகர்கள்
Anna Serial: அம்பலமான பாக்கியத்தின் திட்டம்: சௌந்தரபாண்டி தீட்டிய சதித் திட்டம்: அண்ணா சீரியல் இன்று!

மேலும் காண

Source link