செங்கை, காஞ்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்..! ஏற்பாடுகள் என்னென்ன ?

போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 28-வது ஆண்டாக இந்த ஆண்டும் வருகிற 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் குழந்தை பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர, பிறந்தது முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 3-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை) போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

போலியோ சொட்டு மருந்து – செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1288 மையங்களில் சுமார் 2,38,231  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஆக மொத்தம் 4361 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கட்டுமான பணிக்காக வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 24 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் தவறாமல் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி ஏற்கனவே சொட்டு மருந்து வழங்கப்பட்டிருப்பினும், இம்முறையும் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 93,394 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல், நரிக்குறவர் குடியிருப்புகள் ஆகியோரின் குழந்தைகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்து, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் என 731 மையங்களில் வழங்கப்பட உள்ளது. இதைத் தவிர்த்து நடமாடும் குழுக்கள் மூலமாகவும், பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையம் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைத்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து சுகாதாரதுறை மூலமாக மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணியில் சுகாதாரத் துறை மூலமாகவும், சத்துணவு துறை மூலமாகவும் தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமாகவும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும், இந்த போலியோ சொட்டு மருந்து முகாம் நாளன்று பிறந்தது முதல் 5 வயதிற்கஉட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Source link