TN Weather Update: "இனி வறண்ட வானிலையே" தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை!

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

ஜனவரி 17 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஜனவரி 18 மற்றும் 19 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் வரும் 20 மற்றூம் 21 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின்  ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களாக அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஒரு சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கிறது.

காற்று மாசு:

நேற்று போகி பண்டிகை முன்னிட்டு பலரும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர். அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருப்பதால் போகி கொண்டாட்டத்துடன் சேர்ந்து சென்னை முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதனால் சென்னையில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மணலியில் 287 புள்ளிகள் கொண்டு காற்றின் தரம் பதிவானது. இது மிகவும் மோசமான குறியீடாகவும், இந்த காற்று சுவாசிக்க தரமற்றது. அதேபோல பெருங்குடியில் எண்ணூர் 226, அரும்பாக்கம் 207, ராயப்புரம் 195 என பதிவானது.

காற்று தரக்குறியீடு 100 வரை இருந்தால் அது சுவாசிக்க ஏதுவானது. 100 ஐ கடந்து பதிவானால் அது சற்று மாசடைந்துள்ளது என அர்த்தம். காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் "காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்", 301 முதல் 400 இருந்தால் "காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்", மற்றும் 401 முதல் 500 இருந்தால் "காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" கருதப்படுகிறது.

Source link