இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார்.
47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1976ஆம் தேதி ஜூலை 23ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா – ஜீவா  தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது வாரிசாக பிறந்த பவதாரணி, தனது ஏகாந்தமான குரலால் தன் சிறு வயது முதலே தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
ரமணர் பாடல்கள் பாடி மெய்மறக்கச் செய்வது, மயில் போல பாடலுக்கு தேசிய விருது என சாதனைகளுடன் தன் இசைப் பயணத்தை சிறு வயதில் தொடங்கிய பவதாரணி, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலத்திற்குப் பின்னர் இவர் சமீபமாக மூன்று படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாதாக கூறப்படுகின்றது. 
இளையராஜா இசையமைத்த ராசய்யா என்ற படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பவதாரணி, தன் சகோதரர் யுவன், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். பவதாரணி சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.  
இந்நிலையில், சென்ற மாதம் தான் பவதாரணிக்கு பித்தப்பை புற்றுநோய் இருப்பது குறித்து கண்டறியப்பட்டதாகவும், இலங்கைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் , சிகிச்சை தொடங்கும் முன்னரே அவர் உயிரிழந்ததாகவும் பவதாரணியின் உறவினரும் நடிகையுமான கருணா விலாசினி தெரிவித்துள்ளார்.
இவரது இசையில் இலக்கணம், அமிர்தம், இந்தி திரைப்படமான பிர் மிலேங்கே உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பவதாரணியின் இழப்பால் வாடும் இளையராஜாவின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
 

Source link


Latest News

View All

  1. Каталог нейросетей AI-Panda https://ai-panda.ru это более 1000 AI-инструментов в одном месте. Найди идеальную нейросеть для своих задач: генерация изображений, работа…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed