2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது.
அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 8வது வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோரின் பேட்டிங் முக்கியக் காரணங்கள்.
முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி, அவரின் மகன் மகள், அவரின் தங்கை ஷாமிலி ஆகியோர் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியை கண்டு களித்தனர். நேற்று மேட்ச் பார்க்க சென்ற போது ஷாலினி தனது மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.
#ChennaiSuperKings🔥🔥#Ajith sir Family ❤️🥰#AjithKumar ll #VidaaMuyarchi#GoodBadUgly pic.twitter.com/l9WDehiz3k
— Churchill Rajasekar (@rajasekar95) March 23, 2024
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், அவரின் மனைவி கிருத்திகா, நடிகர் தனுஷ் உள்ளிட்டோரும் போட்டியை கண்டு களித்தனர்.
மேலும் படிக்க
PBKS Vs DC, IPL 2024: சொதப்பிய டாப்-ஆர்டர் – இறுதியில் போராடிய டெல்லி – பஞ்சாப் அணிக்கு 175 ரன்கள் இலக்கு
PBKS vs DC, IPL 2024: டாஸ் வென்ற தவான் தலைமையிலான பஞ்சாப்..! முதலில் பேட்டிங் செய்யும் டெல்லி அணி
மேலும் காண