Minister E V Velu Said That In Tiruvannamalai District 300 Crores Worth Of Trade Is Done Through Cow Milk – TNN | திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் பால் மூலம் ரூ.300 கோடி அளவில் வர்த்தக பரிவர்த்தனை

திருவண்ணாமலை பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ரூ 43.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நிர்வாக அலுவலக கட்டடத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ் கலந்து கொண்டனர்.
பொதுப்பணித்துறை  அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
பால் உற்பத்தி துறையானது கிராமப்புறங்களில் உள்ள நிலமற்ற சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பதில் முதன்மை பங்காற்றுகிறது. அம்மாபாளையம் பால்பவுடர் தொழிற்சாலை கழக ஆட்சியில் துவக்கப்பட்டது. இந்த ஒன்றியத்தில் சுமார் 2.60 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அளவில் கறவை மாடுகள் கணக்கெடுப்பில் நமது மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பால் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 522 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் ரூ22.42 கோடி பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. 58 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் மற்றும் இரண்டு பால் குளிரூட்டும் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ரூ.300 கோடி அளவில் வர்த்தக பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
 
 

கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் பாலுக்கு உரிய விலை மற்றும் பால் உற்பத்திக்கு தேவையான இடுபொருள்கள் சேவைகளை வழங்குவதன் மூலம் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு பால்வளத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவின் நிறுவனம் நுகர்வோர்களுக்கு பால் நியாயமான விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்கிறது. இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிலையான தொடர் வளர்ச்சியினை உறுதிப்படுத்தி இரண்டாம் வெண்மை புரட்சியினை இலக்காக கொண்டு செயல்படுகிறது. மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நான்கு வகையான திருமணம் நிதி உதவி திட்டத்தின் கீழ் தங்க நாணயங்கள் வழங்குதல். 2023 முதல் 2024 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கு நான்கு வகையான திருமணங்களுக்கான திருமாங்கல்யம் செய்ய தங்க நாணயம் மற்றும் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம் சமூகநல அலுவலகத்திற்கு 967 தங்க நாணயங்களும் (தங்கத்தின் மதிப்பு ரூபாய் 46144505.86 மற்றும் திருமண நிதி உதவி தொகையாக பட்டப் படிப்பு முடித்த ஒரு பயனாளிக்கு ரூபாய் 50 ஆயிரம் வீதம் 415 பயனாளிகளுக்கும் ரூ20750000 பட்ட அல்லாத
 

 
ஒரு பயனாளிக்கு ரூ 25 ஆயிரம் வீதம் 552 பயனளிகளுக்கும் ரூ13800000 ) இரண்டிற்கும் மொத்தமாக ரூ80694505 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு மறுமண திருமண நிதி உதவி திட்டம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவி திட்டம் ஆகிய நான்கு வகையான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 967 பயனாளிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட்டது. மேலும் திருவண்ணாமலை நகரம் வார்டு எண்-4 பிளாக் எண்:30 ச.எண் 1817 அண்ணா நகர் பாவாஜி நகர் மற்றும் மத்தலாங்குளத் தெரு ஆகிய இடங்களில் 142 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, ஆவின் பொதுமேலாளர் என்.அமரவாணி ஆவின் துணை பொதுமேலாளர் எல்.ரங்கசாமி மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link