Naam Tamilar Party: கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர வேண்டும்.. நாம் தமிழர் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் விசாரணை..

கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மே மாதம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தரப்பிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அதிமுகவிற்கு எந்த கட்சி ஆதரவு அளிக்கும், எந்த கட்சி கூட்டணியில் இருந்து தொகுதி பங்கீடு பெரும் என்பது தொடர்பாக தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த பாஜக விலகியது குறிப்பிடத்தக்கது.

இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் நாம் தமிழர் கட்சி தொடக்கத்தில் இருந்து அனைத்து தேர்தலையும் தனித்து கூட்டணி இல்லாமல் சந்தித்து வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த சின்னம் வேறு ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க வேண்டும் என ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இந்த ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நாளை தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான முதன்மை அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. நாளைய விசாரணையில் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை என்றால் வேறு சின்னம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link