Gram Sabha Meeting: "நான் டம்மி தலைவராக இருக்கிறேன்; மக்களுக்கு பணி செய்ய முடியவில்லை" -ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

விழுப்புரம்: ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டம்மியாக, ஊராட்சி ஒன்றியத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் ஹிட்லர் ஆட்சியை நடத்தி வருவதாகவும் கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம்  ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்கூடலூர் ஊராட்சியில் ஈச்சேரி, கீழ் கூடலூர் ஆகிய கிராமங்கள் உள்ளது. இதற்கு ஈச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இ.என்.எஸ் சேகர் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் இன்.என்.எஸ் சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் புறக்கணிக்க இருந்த நிலையில், தகவலறிந்து சாரம் வட்டார வளர்ச்சி அலுவலக திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் தேவதாஸ் கிராம சபை கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார்.

டம்மி தலைவராக மட்டுமே செயல்பட்டு வருகின்றேன்

பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் அடுக்கு அடுக்கான குற்றசாட்டுகளாக அடுக்கினார். குடிநீர் பைப்புகள் புதைக்கப்பட்டது சரிவர இல்லை எனவும், ஊராட்சி மன்ற பள்ளி கட்டிடம் மற்றும் குடிநீர் தண்ணீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது எனவும், மக்களுக்கு குடிநீர் சரியாக கிடைப்பதில்லை, விவசாயிகள் பயனுக்காக ஏரியில் போடப்பட்ட மதகு, முழுமை அடையாத நிலையில் முடிந்ததாக பில் எடுக்கப்பட்டுள்ளது, பழைய மதகை கட்டியதாக கூறி கட்டாத மதகிற்கு பில் எடுக்கப்பட்டுள்ளது, கட்டியதாக சொல்லும் மதகின் வழியாக விவசாயத்திற்கு நீர் பயன்படுத்த முடியாமல் மழை நீர் ஏரியில் கலக்கிறது, மதகில் நீர் தடுக்கும் சூழல் சக்கரம் திருடப்பட்டு உள்ளது, இது குறித்து கிராம மக்கள் தலைவர் ஆகிய என்னை கேள்வி கேட்கின்றனர், என்னால் எந்த பதிலும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன், ஊராட்சி மன்ற தலைவர் என்று தான் எனக்கு பெயர் ஆனால் நான் டம்மி தலைவராக மட்டுமே செயல்பட்டு வருகின்றேன். அப்படியே இருந்து விடுகிறேன் எனக்கு ஒரு வட்டார வளர்ச்சி இடம் முறையிட்டார். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அனைத்து பணிகளையும் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை எடுத்து தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஊராட்சி மன்ற தலைவர் கூறியதாவது:-

ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெருந்தலைவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே நிர்வாகம் செய்து வருகிறார். ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர்களும் டம்மியாகத்தான் உள்ளனர், முதலமைச்சர் ஸ்டாலின்  தலைமையிலான தமிழக அரசு நல்லாட்சி மேற்கொண்டு வந்தாலும் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் சர்வாதிகார ஆட்சி,  ஹிட்லர் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது, ஒலக்கூர் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் கண்காணிப்பு குழு அமைத்து, ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவர் வைத்துள்ள இந்த பகிரங்க குற்றச்சாட்டு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link