7 Am Headlines today 2024 March 21th headlines news Tamil Nadu News India News world News

தமிழ்நாடு:

மக்களவைத் தேர்தல்: நாளை முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்.
எங்கு வாக்கு குறைந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் பதில் சொல்ல வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் எச்சரிக்கை.
மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 21 பேரின் பட்டியல் வெளியீடு.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளில் 11 வேட்பாளர்கள் புதுமுகங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்.
 பழனி மாணிக்கம், செந்தில்குமார், பார்த்திபன் உட்பட 10 திமுக எம்பிக்களுக்கு சீட் மறுப்பு.
பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டிடிவி தினகரின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
அதிமுகவில் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு.
நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த 32 தமிழ்நாடு மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா அறிவிப்பு.
விளவங்கோடி தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பாஜகவில் அமமுகவுக்கு 2, புதிய நீதிக்கட்சி, தமமுக, இ.ம.ச.மு.கவுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.
அதிமுகவில் தேமுதிகவுக்கு 5, எஸ்டிபிஐ, புதிய தமிழக கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.
பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்வதில் இழுபறி என தகவல்

இந்தியா: 

மக்களவை தேர்தல்: அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்.
மதச்சார்பற்ற நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் அவசியம் – அமித்ஷா.
அருணாச்சலப் பிரதேசத்தில் அதிகாலையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு.
மக்களவைத் தேர்தல்: மராட்டியத்தில் 12 வேட்பாளர்களை இறுதி செய்தது காங்கிரஸ் கட்சி.
போலி செய்திகளை கண்டறிந்து தடுக்க ஃபேக்ட் செக் குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டது மத்திய அரசு.
 ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸில் இணைந்தார்.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

உலகம்: 

ஐரோப்பாவில் முடக்கப்பட்ட ரஷ்ய நிதியை உக்ரைனுக்கு அளிப்பது திருட்டுச்செயல் – அதிபர்.
சீனாவில் சுரங்க தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து – 14 பேர் உயிரிழப்பு.
கடந்த ஆண்டு பதவியேற்ற வியட்நாம் அதிபர் வோ வான் துவாங் ராஜினாமா செய்தார்.
அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கார் பதவி விலகப் போவதாக அறிவிப்பு.
உக்ரைன் – ரஷ்ய போருக்கு பேச்சு மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்.
ஜப்பான் அருகே தென்கொரிய சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் காணவில்லை என தகவல்.
பாகிஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து – 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு.
காஸாவில் அலிஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் 90 பேர் சுட்டுக்கொலை

விளையாட்டு: 

தோனிக்கு கிரிக்கெட் என்பது எல்லாமும் கிடையாது என்பதை அவர் எப்போதோ புரிந்து கொண்டார் என்று ஜாகீர் கான் கூறியுள்ளார்.
ஐ.சி.சி டி20 தரவரிசை; பேட்டிங் பட்டியலில் முதலிடத்தில் தொடரும் சூர்யகுமார் யாதவ்
ஐபிஎல் 2024: சென்னை – பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் தொடங்கிறது ஐபிஎல் 2024ல் 17வது சீசன்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

Published at : 21 Mar 2024 06:53 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link