தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் (Ninaithen Vandhai). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழில் தன்னை காப்பாற்றிய விஷயம் பற்றி அப்பாவிடம் சொல்லி கொண்டிருந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது சுடரும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கும்போது அவளது சித்தி ரேணுகா போனை வாங்கி இவர்கள் பேசுவதை கேட்டு போனை தூக்கி போட்டு உடைக்கிறாள். இதனையடுத்து சுடர் அஞ்சலியிடம் எழிலுக்கு நன்றி சொல்வது போல பேச, அவளும் புரியாமல் யாருக்கு சொல்ற என்று கேக்க, கடவுளுக்கு என்று சொல்லி சமாளிக்கிறாள்.
“எழிலுக்கு எப்படியாவது நன்றி சொல்ல வேண்டும்” என்று யோசிக்கும் சுடர், விதவிதமாக சமைத்து அசத்த முடிவெடுக்கிறாள். உடனே சமைத்து டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைக்க, கனகவல்லியும் கணக்கு பிள்ளையையும் யாருக்காக இவ்வளவு சமைக்கிற என்று கேட்க “எழில் சாருக்காக தான், பசங்களும் சாப்பிடட்டும்” என்று சொல்ல “அவன் இதெல்லாம் சாப்பிட மாட்டான். கோபம் தான் படுவான்” என்று சொல்கின்றனர். ஆனால் சுடர் நான் சாப்பிட வைக்கிறேன் என்று சொல்கிறாள்.
அடுத்து சாப்பிட வரும் எழில் வெரைட்டி வெரைட்டியாக இருப்பதைப் பார்த்து “எதுக்கு இதெல்லாம் செய்த? இது எல்லாத்தையும் எடுத்துட்டு போ. வழக்கமாக சாப்பிடுவதைக் கொண்டு வா” என்று சொல்ல, சுடர் “இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் சமைத்ததை சாப்பிடுங்க” என்று சொல்கிறாள். ஆனால் எழில் வேண்டாம் என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறான்.
“கீரை எல்லாம் எவ்வளவு ஹெல்த்தி, இதெல்லாம் உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு நாள் சாப்பிட்டு பாருங்க, பிடிக்கலைன்னா இனிமே நான் சமைக்க மாட்டேன்” என்று சொல்ல, எழில் சாப்பிட உட்கார எல்லாமே சூப்பராக இருக்க ரசித்து சாப்பிடுகிறான். குழந்தைகள் “வாசனை நல்லா வருது எல்லாம் வித்தியாசமா இருக்கு. அப்பாவும் சாப்பிடுறாரு” என்று வித்தியாசமாக பார்க்கின்றனர். இப்படியான நிலையில் இன்றைய நினைத்தேன் வந்தாய் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Saranya Ponvannan: ரசிகர்களின் பாசக்கார அம்மா சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தாரா? உண்மை என்ன?
Prabhudeva Birthday : நடனத்தின் இலக்கணத்தை மாற்றியமைத்தவர்.. இந்தியாவின் ஜாக்சன் பிரபுதேவாவுக்கு பிறந்தநாள்
மேலும் காண