Actor vijay antony talks about his love proposal story in recent interview


நடிகர் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் 5 முறை காதல் தோல்வி அடைந்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையாளராக வலம் வருகிறார். நேற்று அவர் ஹீரோவாக நடித்த “ரோமியோ” படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனுடைய தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி நேர்காணல்களில் வெளிப்படையாக பேசும் விஜய் ஆண்டனி, காதல் வாழ்க்கை பற்றியும் பேசியுள்ளார். 
அதாவது, “என் வாழ்க்கையில் காதலை சொல்ல முயற்சி செய்ததெல்லாம் காமெடியான கதை. நான் பஸ்ல ஒரே பொண்ணை பார்த்துட்டே இருப்பேன். அந்த பெண் ஒருமுறை பார்த்துட்டா அது பேரு தான் காதல். அந்த பெண் என்னை பார்த்தாளா, பக்கத்துல நிக்குறவன்னை பார்த்தாளான்னு கூட தெரியாது. 90ஸ் காலக்கட்டம் அது. ஊரில் லவ் லெட்டர் கொடுப்பது எல்லாம் பெரிய விஷயம். நிறைய ஆண்களுக்கு காதலை சொல்வது எப்படி என்பது கூட தெரியாது. 
உடல் ரீதியான ஈர்ப்பை தாண்டிய அத்தனை உணர்வுமே காதல் தான். நான் 5 முறை காதலில் தோல்வி அடைந்திருக்கிறேன். 6வது முறையாக தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டேன். எளிமையான என்னுடைய வாழ்க்கை தான் நான் காதலில் தோல்வியடைய காரணமாக அமைந்தது. என்னுடைய எளிமையும், வாழ்க்கை முறையும் பெண்களுக்கு பிடிக்காமல் இருந்தது. 
ஃபாத்திமா சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார்கள். சுக்ரன் படம் வெளியான சமயத்தில் அதில் இடம்பெற்ற உச்சி முதல் பாடல் நன்றாக இருக்கிறது என சொல்லி போன் செய்தார். எனக்கு அப்போது கல்யாண  வயசு. என்னால் நம்பவே முடியவில்லை. நமக்கு வந்து ஃபாத்திமா போன் பண்றாங்கன்னு இருந்துச்சு. முதல் போனே ஒரு மணி நேரம் பேசினோம். அப்போது பக்கத்து தெருவுல இருப்பதை தெரிந்து கொண்டு, வீட்டுக்கு வருமாறு இருவரும் அழைத்துக் கொண்டோம். 
3வது நாளில் அவரிடம், உங்களுக்கு யாராவது மாப்பிள்ளை பார்த்தார்கள் என்றால் என்னோட பெயரையும் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் என சொன்னேன். ஃபாத்திமா தொடர்ந்து என்னிடம் பேசினார். 4வது நாளில் போனில் தாலி கட்டினேன். 5வது நாளில் நான் படத்தின் இயக்குநர் சங்கர் என்னை பார்க்க வந்தார். அவரிடம் என்னோட மனைவி என ஃபாத்திமாவை அறிமுகம் செய்து வைத்தேன். அவ்வளவு ஸ்பீடாக என்னுடைய காதல் கதை சென்றது” என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link