IPL 2024 Points Table Orange Cap & Purple Cap Holders After MI vs RCB IPL Match


இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் நேற்றைய போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
இந்த வெற்றிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 புள்ளிகள் அட்டவணையில் ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9வது இடத்திலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 10வது இடத்திலும் தள்ளாடி வருகிறது. 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளது. 
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. 
மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஐபிஎல் 2024 போட்டி 25க்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட புள்ளிகள் அட்டவணை, ஆரஞ்சு கேப் மற்றும் பர்பிள் கேப் வைத்திருப்பவர்களை கீழே பார்க்கலாம்.




தரவரிசை


அணிகள்


போட்டிகள்


வெற்றி


தோல்வி


புள்ளிகள்


ரன் ரேட்




1


ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)


5


4


1


8


+0.871




2


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)


4


3


1


6


+1.528




3


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)


4


3


1


6


+0.775




4


சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)


5


3


2


6


+0.666




5


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)


5


3


2


6


+0.344




6


குஜராத் டைட்டன்ஸ் (GT)


6


3


3


6


-0.637




7


மும்பை இந்தியன்ஸ் (MI)


5


2


3


4


-0.073




8


பஞ்சாப் கிங்ஸ் (PBKS)


5


2


3


4


-0.196




9


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)


6


1


5


2


-1.124




10


டெல்லி கேப்பிடல்ஸ் (DC)


5


1


4


2


-1.370


ஆரஞ்சு கேப்: 
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி 319 ரன்கள் அடித்து தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 
1. விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) – 6 போட்டிகள் (319 ரன்கள்)
2. ரியான் பராக் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 5 போட்டிகள் (261 ரன்கள்)
3. ஷுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்) – 6 போட்டிகள் (255 ரன்கள்)
4. சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 5 போட்டிகள் (246 ரன்கள்)
5. சாய் சுதர்ஷன் (குஜராத் டைட்டன்ஸ்) – 6 போட்டிகள் (226 ரன்கள்)

KING (Orange Cap) 🤝 BOOM (Purple Cap)The two modern-day greats of Indian cricket! 🐐📷: Jio Cinema #JaspritBumrah #MumbaiIndians #RCB #viratkohli #Cricket #IPL2024 #MIvRCB #Sportskeeda pic.twitter.com/TvgxMuJGGh
— Sportskeeda (@Sportskeeda) April 11, 2024

பர்பிள் கேப்:
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா 10 விக்கெட்களுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 
1. ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்): 5 போட்டிகள் (10 விக்கெட்டுகள், எகானமி: 5.95)
2. யுஸ்வேந்திர சாஹல் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – 5 போட்டிகள் (10 விக்கெட்டுகள், எகானமி: 7.33)
3. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – 4 போட்டிகள் (9 விக்கெட்டுகள் , எகானமி: 8.00)
4. அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப் கிங்ஸ்) – 5 போட்டிகள் (8 விக்கெட்டுகள், எகானமி: 8.72)
5. ஜெரால்ட் கோட்ஸி (மும்பை இந்தியன்ஸ்) – 5 போட்டிகள் (8 விக்கெட்டுகள், எகானமி: 10.59)

மேலும் காண

Source link