Decoration of 1008 kg vegetables and fruits to Karpaka Vinayaka on the occasion of Tamil New Year


கரூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கற்பக விநாயகருக்கு 1008 கிலோ காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்ததை அடுத்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்:
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கரூர் அண்ணா சாலை பகுதி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 1008 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூலவர் கர்ப்பக விநாயகர் தீர்த்த விநாயகர் பாலமுருகன் விஷ்ணு துர்க்கை நவக்கிரகங்கள் உள்ளிட்ட பரி காரதெய்வங்களுக்கு எண்ணெய்க்காப்பு சாற்றி பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், எலுமிச்சைச்சாறு, திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் மற்றும் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 

காய்கறிகள், பழங்களால் அலங்காரம்:
அது தொடர்ந்து மூலவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் மாலை அணிவித்து பிறகு பக்தர்கள் வழங்கிய 1008 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் மூலவர் கணபதி மற்றும் தீர்த்த விநாயகர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் காய்கறி மற்றும் பழங்கள் அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டி.செல்லாண்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மனுக்கு பல்வேறு வகையான காய்கறிகளால் சிறப்பு அலங்காரம்.
 

கனி அலங்காரம்:தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக கனி அலங்காரத்தில் பல்வேறு சுவாமிகள் காட்சி தருகின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட டி. செல்லாண்டிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் பகவதி அம்மனுக்கு பல்வேறு வகையான காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் பகவதி அம்மனுக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
 
 

அதைத்தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் தீபம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு டி.செல்லாண்டிபாளையம் பகவதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற காய்கனி அலங்காரத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஊர் கொத்துக்காரர் மற்றும் ஊர் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் காண

Source link