சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் (Animal Film) திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸின் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனிமல்
ரன்பீர் கபூர் நடித்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது அனிமல் படம். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், ட்ரிப்தி திம்ரி, பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். பல்வேறு சர்ச்சைகள், கடுமையான விமர்சனங்களை அனிமல் படம் சந்தித்தது, இருந்தும் வெகுஜனத்திடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் 900 கோடி வரை உலகளவில் வசூல் செய்தது. சமீபத்தில் இந்தப் படத்தில் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் மும்பையில் சந்தித்துக் கொண்டார்கள்.
அனிமல் படத்திற்கு எழுந்த விமர்சனங்கள்
அனிமல் படத்திற்கு பல்வேறு தளத்தில் இருந்து விமர்சனங்கள் எழுந்தன. இந்திய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட், கேப்டன் மில்லர் மற்றும் தளபதி 68 படங்களின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி, கவிஞர் ஜாவித் அக்தர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தினார்கள்.
ஜாவித் அக்தர் அனிமல் படம் குறித்து இப்படி கூறியுள்ளார் “ ஒரு படத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் தனது ஷூவை நாக்கால் நக்கும்படி சொல்வது, ஒரு பெண்ணை அறைவது ஆகியவற்றை நியாயப்படுத்துகிறான். அந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் ஆகிறது என்றால் அது மிகவும் அபத்தானது.” 
அதே நேரத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா, நடிகைகள் த்ரிஷா, அலியா பட், அல்லு அர்ஜூன் உள்ளிட்டவர்கள் அனிமல் படத்தை பாராட்டினார்கள். தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அடுத்ததாக அனிமல் படம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் அனிமல் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
ஓடிடி ரிலீஸ்
அனிமல் படம் வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தை வாங்கியுள்ளது. மேலும் ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரதியில் மேலும் புதிய காட்சிகள் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
அனிமல் பார்க்
அனிமல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முதல் பாகத்தில் நடித்த ரன்பீர் கபூர் இரண்டு கதாபாத்திரங்களில்  நடிக்க இருக்கிறார். இப்படம் தவிர்த்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார். ஹாரர் படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது.

மேலும் படிக்க : Vikram: “விக்ரமுக்கு நடிக்க தெரியாது” தேவயானி கணவர் பேட்டியால் அதிர்ச்சி – கொந்தளித்த ரசிகர்கள்!
Vijay Sethupathi:விஜய் சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? அண்ணாமலை கேள்வி

Source link


Latest News

View All

  1. Каталог нейросетей AI-Panda https://ai-panda.ru это более 1000 AI-инструментов в одном месте. Найди идеальную нейросеть для своих задач: генерация изображений, работа…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed