Defence Budget 2024: பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும்? எதிர்பார்ப்பை கிளப்பும் இடைக்கால பட்ஜெட்..!

ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் ஆண்டு என்பதால் இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த முறை நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும்?

புவிசார் அரசியல் காரணமாக உலகளவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பதில் உச்சபட்ச எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, வியூக ரீதியான தொழில்நுட்பத்தில் தற்சார்புடன் இயங்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த இடைக்கால பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2 உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்கும் முக்கியமான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக ஆயுதங்கள், போர் கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு 5-7 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டான 2023-24இல் பாதுகாப்புத் துறைக்கு ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.5.25 லட்சம் கோடியிலிருந்து 13 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-23 நிதியாண்டில் ஆயுதங்களை நவீனமயமாக்கவும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

நிபுணர்கள் கூறுவது என்ன?

கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 6 சதவிகிதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது, 1.62 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2020 நிதியாண்டை ஒப்பிடுகையில் 57 சதவிகிதம் அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவை நிறுவனத்தின் சினேகா போடார் கூறுகையில், "பாதுகாப்புத் துறைக்கான ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகள் பாசிட்டிவாக உள்ளது. தன்னிறைவு பெறுவதும், இந்தியாவை நீண்ட காலத்திற்கு ஏற்றுமதி மையமாக மாற்றுவதுமே அரசாங்கத்தின் இலக்கு ஆகும். குறிப்பாக, 2025 நிதியாண்டில் அதிக அளவில் ஆயுதங்களை வாங்க நிதி ஒதுக்கப்படும் என்பதால் பாதுகாப்புத் துறையிலும் முதலீடுகள் தொடரும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

பிரபுதாஸ் லில்லாதேர் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் அமித் அன்வானி கூறுகையில், "பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ரயில்வே போன்ற துறைகளுக்கு வரவிருக்கும் பட்ஜெட்டில் கணிசமானதாக இல்லாவிட்டாலும், அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும் என தொழில்துறை எதிர்பார்க்கிறது. இருப்பினும், தேர்தலுக்குப் பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது இன்னும் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன" என்றார்.

Source link