Mayank Yadav: "அவர் கிருஷ்ணரின் பக்தர்" மயங்க் யாதவ் அசைவம் சாப்பிடாதததற்கு காரணம் இதுதானா?

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளின் போது இளம் இந்திய வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி உலக கிரிக்கெட்டின் கவனத்தினை ஈர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் உலக கிரிக்கெட் அரங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் என்றால் அது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் தான். இவர் 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தி வருகின்றார்.

கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள் மயங்க் யாதவின் திறமையைப் பாராட்டி வருகின்றனர். இவர் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை அள்ளி ஊதா நிற தொப்பிகள் வெல்பவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இப்படியான நிலையில் மயங்க் யாதவ் குறித்து அவரது தாயார் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக மயங்க் யாதவின் உணவு பழக்கமுறை குறித்து அவரது தாயார் மம்தா யாதவ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில், ”எனது மகன் மயங்க் யாதவ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து அசைவ உணவுகளை தவிர்த்து விட்டார். அன்றில் இருந்து இன்று வரை சைவ உணவுகளையே மயங்க் யாதவ் சாப்பிட்டு வருகின்றார். பொதுவாகவே விளையாட்டு வீரர்கள் அசைவ உணவுகளை உட்கொள்வர். அதுபோலத்தான் எனது மகனும் இருந்தார். ஆனால் இப்போது அவரது டையர்ட் சார்ட்டில் இருப்பதைத் தவிர சாதாரணமான பருப்பு, ரொட்டி, சாப்பாடு, பால், காய்கறிகள் போன்றவற்றை நாங்கள் தயார் செய்து கொடுக்கமாட்டோம்.

காரணம் இதுதான்

எனது மகன் சைவ உணவுகளுக்கு மாறியதற்கு சரியான காரணங்கள் என்ன என்பது எனக்கு தெரியவில்லை என்றாலும், இரண்டு காரணங்கள் இருப்பதாக நான் நினைப்பது, எனது மகன் கடவுள் கிருஷ்ணரின் தீவிர பக்தன். அவர் மீது இருக்கும் பக்தியால்தான் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டார். இரண்டாவது அசைவ உணவு அவரது உடலுக்கு ஏற்றது இல்லை என அவர் நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் எனது மகன் மயங்க் யாதவ் விரைவில் இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு இந்திய அணியில் இடம் பெறவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் எங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் எங்களது உறவினர்கள் மயங்கின் நண்பர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளோம்” எனக் கூறினர்.

இந்திய அணியில் இடம்

ஐபிஎல்லின் ஆரம்ப கட்டத்தில் மயங்க் யாதவின் பவுலிங்கைக் கண்டு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரை இந்திய அணியில் கட்டாயம் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். ஜூன் மாதம் தொடங்கும் 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட கட்டாயம் வாய்ப்பளிக்க மயங்க் யாதவுக்கு வேண்டும் என கூறி வருகின்றனர்.

Source link