Jallikattu 2024: Prabhakaran From Podumbu Village, Who Tamed 14 Bulls, Was Awarded A Nissan Car On Behalf Of Minister Udayanidhi Stalin

Palamedu Jallikattu : உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி மொத்தம் 10 சுற்றுடன் நிறைவு பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தமாக 10 சுற்றுகள் நடந்த நிலையில் 840 காளைகள் அவிழ்க்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக புதுக்கோட்டை ராக்கெட் சின்னக்கருப்புக்கு சிறந்த காளைக்கான கார் பரிசாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக சிறந்த மாடுபிடி வீரர் மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அவர்களுக்கு (14 காளைகள்) கார் பரிசாக வழங்கப்பட்டது.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வெற்றிபெற்ற காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கு பரிசுகளை வழங்கினார்கள். பரிசுகள் வழங்கப்பட்டபோது மாவட்ட ஆட்சித் தலைவர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சோழவந்தான்  சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பலர் உடன் இருந்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு: 
 
மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி  காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் தொடங்கியது.  முதலில் கிராம காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில்  840 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
போட்டி தொடங்கியவுடன் முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. போட்டியில் காளைகளுக்கு சவால் விடுத்து மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர்.  மாடுபிடி வீரர்களையும் துவம்சம் செய்த காளைகள் வெற்றிபெற்றது.
போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களமாடி 14 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரரான மதுரை மாவட்டம் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற மாடுபிடி வீரருக்கு நிசான் கார் மற்றும் APACHE பைக் பரிசும், பரிசுகோப்பையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை  சேர்ந்த தமிழரசன் என்ற மாடுபிடி வீரருக்கு இரண்டாவது பரிசாக APACHE பைக் பரிசும் வழங்கப்பட்டது.
போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளையான புதுக்கோட்டை மாவட்டம் இராயவயல் சின்னக்கருப்பு மாட்டின் உரிமையாளருக்கு நிசான் கார் பரிசாகவும், 2 ஆம் இடத்தில் சிறப்பாக களம் கண்ட தேனி மாவட்டம் கோட்டூர் அமர்நாத் என்பவரது காளைக்கு பசுங்கன்றுடன் கூடிய நாட்டுபசுமாடும் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும்,  மற்றும்  சிறந்த காளைகளுக்கும் ,, குக்கர், எல்.இ.டி TV, , தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்பட்டது.
இதேபோன்று போட்டியின்போது பணியில் இருந்து காவல்துறை டிஎஸ்பி மற்றும் சார்பு ஆய்வாளர்கள் இருவர் மற்றும. மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் 11 பேர் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல் பரிசு வென்றவர் யார்..? 
பாலமேடு ஜல்லிக்கட்டில் பிரபாகரன் என்பவர் 14 மாடு பிடித்து முதல் இடம் பிடித்தார். அவரை தொடர்ந்து, கடந்தாண்டு பாலமேட்டில்  முதல் பரிசு பெற்ற தமிழரசன் இந்தாண்டு 2-வது இடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த மதுரை பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல், இரண்டாம் இடம் பிடித்த தமிழரசனுக்கு Apache பைக் பரிசாக வழங்கப்பட்டது.
 
 

Source link