ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த‍து பழகுடியின சமுதாயத்தை சேர்ந்தவர்… செல்வ பெருந்தகை பகீர்…

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த‍து பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் காரணம் அல்ல, கொலைக்கு காரணம் பழிக்குப்பழி என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கொலை குறித்து பல்வேறு தலைவர்கள் கண்டனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்ற்னர்.

அந்த வகையில், சென்னையில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பேசியுள்ளார்.

சென்னையில் மிகப்பெரிய படுகொலை நடந்திருப்பதாக தெரிவித்த செல்வபெருந்தகை, தலித் சமூதாயத்தை சார்ந்தவர் என்று ஆம்ஸ்ட்ராங்கை குறிப்பிட்டு கூறினார். அவரை கொலை செய்தவன் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவன் என்ற செல்வபெருந்தகை, அவனுக்கு படிப்பறிவு இல்லை என்று தெரிவித்தார்.

இது தேவையா என்று கேள்வி எழுப்பிய செல்வபெருந்தகை, இந்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையோ, தூக்குத்தண்டனையோ கிடைக்கலாம் என்றும், இதனால் அவனது குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையெல்லாம் உணராமல் இந்த கொலையை செய்திருப்பதாக வேதனை தெரிவித்த செல்வபெருந்தகை, இதற்கு படிப்பறிவு இல்லாத‍தே பிரச்சினையாக இருப்பதாக கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் கொலை செய்திருப்பதாக செல்வபெருந்தகை கூறியிருப்பது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.