ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, உக்ரைனில் இருந்து பெலுகா திமிங்கலங்கள் ஸ்பெயினுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. கட்டுமானங்களை எல்லாம் சிதைத்து வருவதால், பொதுமக்கள் கட்டடங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதே நிலை அங்கு கர்கிவ் நகரில் உள்ள அக்குவாரியமில் வளர்க்கப்படும் வெள்ளை நிற பெலுகா திமிங்கலங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றை பாதுகாக்க உக்ரைன் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, ஸ்பெயினில் உள்ள வலென்சியா நகருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறிய தொட்டியில் 15 வயதான ப்ளோம்பிர் என்ற ஆண் பெலுகா திமிங்கலத்தையும், 14 வயதான மிராண்டா என்ற பெலுகா திமிங்கலத்தையு்ம ஏற்றிக்கொண்டு, தண்ணீர் குறையாமல் இருக்க, பெரிய டேங்குகளில் தண்ணீர் ஏற்றிக் கொண்டு விமானத்தில் ஏற்றினர்.
https://x.com/AFP/status/1803849293654299085
ஆபத்தான இந்த ஆபரேஷன் விமானம் மூலம் பாதுகாப்பாக நடத்தப்பட்டது. விமானத்தில் இருந்து இறக்கியதும், டிரக் மூலமாக, வெலன்சியாவில் உள்ள மையத்திற்கு பெலுகா திமிங்கலங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து, கிரேன் உதவியுடன் வெளியே எடுத்து தண்ணீரில் விடப்பட்டன.
ஆபத்தில் விளிம்பில் இருக்கும் இந்த அறியவகை திமிங்கலங்களை பாதுகாக்க, போர் காலகட்டத்திலும் உக்ரைன் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.