இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று அதாவது மார்ச் மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் சுழற்பந்து தாக்குதலால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிக்ஸருக்கு பறந்த 151.2 கி.மீட்டர் வேகப்பந்து:
இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் இன்னிங்ஸை வழக்கம்போல் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தொடங்கினர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த போட்டியில் இந்திய அணியின் ஸ்கோர் 44 ரன்களாக இருந்த போது ரோகித் சர்மா ஒரு சிக்ஸர் விளாசி இருந்தார்.
இந்த சிக்ஸரை இங்கிலாந்து அணியின் ஆஸ்தான பந்து வீச்சாளர்களில் ஒருவரான மார்க் வுட் பந்தில் பறக்கவிட்டிருந்தார். போட்டியின் நான்காவது ஓவரினை மார்க் வுட் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தினை மார்க் வுட் 151.2 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். ஷார்ட் பாலாக வீசப்பட்ட பந்தை ரோகித் சர்மா தனக்கே உரிதான ஸ்டைலில் சிக்ஸர் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார்.
Mark Wood says “Hi” with 151.2 kmph and Rohit replied “Good Bye” with a pull shot for a six. 👌🫡pic.twitter.com/zITxigP7vh
— Johns. (@CricCrazyJohns) March 7, 2024
இந்த சிக்ஸர் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.