Kamal Haasan: | Kamal Haasan:

1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 
குடியரசு தினம்:

இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
அப்போது ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடி மீது மலர்தூவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தமிழ்நாடு காவல்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
“இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது”
இதன்பின்னர் அண்ணா, கோட்டை அமீர், முதலமைச்சர் சிறப்பு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.…
— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2024

இந்த நிலையில், 75வது குடியரசு தினத்தையொட்டி, நடிகரும், மக்கள் நிதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் தளத்தில், ”மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் எனும் மகத்தான மக்களாட்சித் தத்துவத்தை உலகுக்கு அறிவிப்பதில் முன்னோடியாகத் திகழும் இந்தியா, குடியரசுத் தன்மையின் 75ஆம் ஆண்டைக் கொண்டாடுகிறது.  இந்தியக் குடிமகனாக இதயம் பெருமிதம் கொள்கிறது. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்” என்று பதிவிட்டிருந்தார்.  
எடப்பாடி பழனிசாமி: 
“ஜனநாயகத்தின் தாயகம் என்று சிறப்பிக்கப்படும், உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் நம் இந்திய திருநாட்டின் அரசியலமைப்பு சாசனம் நிறைவேற்றப்பட்ட இந்நன்னாளில், அரசியல் அமைப்புச் சாசனத்தின் அடிப்படை வேர்களான இன வேறுபாடற்ற மதச்சார்பற்ற சமுகமும், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்கவும், அமைதி, வளம், வளர்ச்சி ஓங்கப்பெற்று நாடு செழிக்கவும், நாட்டின் உயரிய வளர்ச்சிக்கும் அயராது பாடுபடுவோம் என உறுதியேற்பதுடன், அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Source link