மகாராஷ்டிராவில் கோர விபத்து… கிரேன் விழுந்து 14 பேர் உயிரிழப்பு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரேன் விழுந்து 14 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஸ்டிரா மாநிலம் தானே அருகே ஷாபூர் பகுதியில் சம்ருதி விரைவு நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட பணி நடைபெற்று வருகிறது.

 

அங்கு, அதிகாலையில், பில்லர்களை தைக்கி வைக்க பயன்படுத்தி வந்த கிரைடர் எனப்படும் மிகப்பெரிய கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவ இடத்திற்கு இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் 6 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

 

 

 

அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.