Tamil Nadu Global Investors Meet Premier State In South Asia CM Stalin TN GIM 2024 | TN GIM 2024: உலக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்

உலக முதலீடுகளை ஈர்க்கும் தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 3ஆவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று (டிச.7) காலை தொடங்கியது. விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார்.
2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒருபகுதியாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த மாநாட்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான செயல் திட்டத்தை வெளியிட்டு முதலமைச்சர் பேசினார். உலக முதலீட்டாளர் மாநாட்டின் வழியே அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம், உள்ளூர் பொருளாதார வளர்ச்சி மேம்படும். குறிப்பாக, தமிழ்நாட்டின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு இது வழிவகுப்பதோடு, தனிநபர் வருமானத்தையும் அதிகரிக்கும்.
முக்கிய முதலீடுகள்
சிங்கப்பூர், கொரியா, டென்மார்க் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களது தொழிலை தொடங்குவது மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகின.

முதல் நாளிலேயே எட்டப்பட்ட இலக்கு
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி என்ற இலக்கு முதல் நாளிலேயே எட்டப்பட்டதாக தொழில்துறைச் செயலர் அருண் ராய் தெரிவித்தார். முதல் நாளிலேயே 100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும் அருண் ராய் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் மாநாடு இன்று (ஜன.8) காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதில் பல்வேறு அரங்குகளில் வெவ்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர நாள் முழுவதும் கண்காட்சிகள் நடைபெற உள்ளன. அத்துடன் வணிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிலையில், உலக முதலீடுகளை ஈர்க்கும் தெற்காசியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’உலக முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாள் வெற்றிகரமான மற்றும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் தொகுப்பாக மாறி உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு ஈர்த்த மொத்த முதலீடுகள் குறித்து இன்று மாலை நன்றி உரையில் அறிவிக்க உள்ளேன். 
தெற்காசியாவின் முதன்மையான மாநிலமாக மாறி வரும் தமிழ்நாடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதல் தேடலாக உள்ளது’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source link