டேனியல் பாலாஜி (Daniel Balaji)
தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. குரல் , உடல்மொழி என தன்னை ஒவ்வொரு படத்திலும் வித்தியாசப்படுத்தி காட்டக்கூடியவர்.
சித்தி, அலைகள், ஏப்ரல் மாதத்தில் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த டேனியல் பாலாஜி செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட படங்கள்
வேட்டையாடு விளையாடு, காக்க, காக்க , பொல்லாதவன் , வை ராஜா , வடசென்னை , பிகில் , அச்சம் என்பது மடமையடா, உள்ளிட்டப் படங்களில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. குறிப்பாக வடசென்னை படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் இவர் பேசிய ” லைஃப தொலச்சிட்டியே டா ” என்கிற வசனம் சமீப காலத்தில் சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலானது.
திடீர் மாரடைப்பால் டேனியல் பாலாஜி மரணம்
கடந்த 2010 ஆம் உயிரிழந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் டேனியல் பாலாஜி என்பது குறிபிடத்தக்கது. 46 வயதில் உயிரிழந்த நடிகர் முரளியைத் தொடர்ந்து அவரது சகோதரனான டேனியல் பாலாஜி 4
ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டேனியல் பாலாஜி மரணமடைந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இறப்பிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். டேனியல் பாலாஜியின் இறுதி சடங்குகள் குறித்த விவரங்கள் அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப் பட இருக்கின்றன
நடிகர் முரளியின் சகோதரர்
கடந்த 2010 ஆம் உயிரிழந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் டேனியல் பாலாஜி என்பது குறிபிடத்தக்கது. 46 வயதில் உயிரிழந்த நடிகர் முரளியைத் தொடர்ந்து அவரது சகோதரனான டேனியல் பாலாஜி 48 வயதில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண