Zee Tamil Will Be Telecasted Special Program For Tribute To Late Dmdk Leader Vijayakanth

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜீ தமிழ் சேனலில் பொங்கல் தினத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. 
தமிழ் சினிமா, தமிழக அரசியல் என இரண்டிலும் தனது திறமையால் கோலோச்சியவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாகவே உடல்நல குறைபாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு திரையுலகிலும் மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது வரை மீள முடியாத சோகத்தில் தான் இருந்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் விஜயகாந்தின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சல்யூட் டூ கேப்டன் என்ற பெயரில் திரையுலகில் ரீல் ஹீரோவாகவும் நிஜ வாழ்க்கையில் ரியல் ஹீரோவாகவும் நல்ல நடிகனாக நல்ல மனிதராக என அனைத்து விதத்திலும் மக்கள் கொண்டாடும் நாயகனாக தொண்டர்களால் கருப்பு எம்.ஜி.ஆர் என கொண்டாடப்பட்ட விஜயகாந்த்தின் மறக்க முடியாத விஷயங்களையும் தருணங்களையும் நினைவு கூறும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் விஜயகாந்த்திற்கு கட் அவுட், பேனர் உள்ளிட்டவற்றை வைத்து தொடர்ந்து அன்னதானம் போன்ற விஷயங்களை செய்து அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நேரத்தில் விஜயகாந்தின் மகன்கள் ஆன பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோருடன் இணைந்து கேப்டன் விஜயகாந்த் நல்ல நடிகனாக, நல்ல தலைவனாக, வழிகாட்டியாக, ரியல் ஹீரோவாக, நண்பனாக அவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை விளக்கும் வகையில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல திரையுலக பிரபலங்கள் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக வரும் ஜனவரி 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒளிபரப்பாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Kamalhaasan: காமெடிக்கு ஒரு அளவு இருக்கு: கமல் – மாயா பற்றி தரக்குறைவான பேச்சு: மன்னிப்பு கேட்டு புகழ், குரேஷி வீடியோ!

Source link