TVK: விஜய் ரசிகர்கள் கொடுத்த இன்ப பரிசு; மாணவர்கள் மகிழ்ச்சி..!


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாணவர்களுக்கு கொடுத்த இன்ப பரிசு. பொது தேர்வில் வெற்றி பெற மனதார வாழ்த்திய நிர்வாகிகள்
பள்ளிக்கல்வி துறை
தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வி துறைக்கு செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் 12 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கியுள்ளது. வருகின்ற 22ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு தேர்வுகளும் அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகளும் துவங்கி நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு அமைப்புகள் சார்பில், தேர்வுக்கு தேவையான பொருட்களை மாணவர்களுக்கு வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

பரிசு பொருட்கள் 
 
அந்த வகையில் நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு தொண்டரணி நிர்வாகிகள் செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆப்பூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு எழுதுகோல், பரிச்சை அட்டை, ஜாமென்ட்ரி பாக்ஸ், பென்சில் உள்ளிட்ட பத்துக்கும் பத்து பொருட்கள் அடங்கிய பரிசு பொருட்களை வழங்கி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
 

மாணவர்களுக்கு அறிவுரை 
 
கடந்த வருடம் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி பொதுத் தேர்வில் சாதித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கியது போல் தற்போது நீங்கள் சாதிக்க வேண்டும் என்று இந்த உதவி வழங்கியிருப்பதாகவும், அனைவரும் படித்து பெரியார்களாக வரவேண்டும் எனவும் செங்கல்பட்டு மாவட்டம் நிர்வாகிகள் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

 
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். இதற்கான ஏற்பாட்டினை செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி தலைவர் எம்எஸ் பாலாஜி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டர் அணி செயலாளர் சர்ஜுனு, செங்கல்பட்டு நகர தொண்டர் அணி தலைவர் அப்துல், நிர்வாகிகள்  டேவிட் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் 
தமிழ் சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Vijay) . ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த விஜய், சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  அதே நேரத்தில், விஜய் அரசியலுக்கு வருவதாக சில ஆண்டுகளாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், பிப்ரவரி 2 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டார். விஜய் தொடங்கியுள்ள கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link