7 AM Headlines: காலை வந்தது! தலைப்பு செய்திகளை தந்தது ஏபிபி நாடு.. சுடச்சுட இதோ..!

தமிழ்நாடு:

இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு; அனைத்து அரசி கார்டுகளுக்கும் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாஜக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தேனியில் டி.டி.வி. தினகரன், சிவகங்கையில் ஓபிஎஸ் மகன் பேட்டி

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தத்திற்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு – இன்று விசாரணை

ஜாமீன் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு; செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கு விபரங்கள் மாற்றப்பட்டுள்ளன – அமர்வு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பரபரப்பு வாதம்

சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜனவரி 12ம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

பொங்கல் பண்டிகை வரை வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும், அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கபடுமெனவும் தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்

இந்தியா:

அயோத்தி ராமர் கோயிலுக்காக கடந்த 32 ஆண்டுகளாக 85 வயது மூதாட்டி மவுன விரதம் இருந்த வந்துள்ளார்.

கோவா ஹோட்டல் அறையில் 4 வயது குழந்தையை கொடூரமாக தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் மாலத்தீவு விவகாரம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து கவனம் ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 21 முதல் ஜூலை 31 வரை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 வது அமர்வுக்கு இந்தியா தலைமை தாங்கி தொகுத்து வழங்கும் என யுனெஸ்கோவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி விஷால் வி ஷர்மா தெரிவித்தார்.

வரலாற்றில் தங்களுக்கு எப்போதுமே முதல் ஆதரவாளராக இருப்பது இந்தியாதான் என, மாலத்தீவுகளின் சுற்றுலாத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

உலகம்:

பூடான் நாடாளுமன்ற தேர்தல்; மக்கள் ஜனநாயக கட்சி அபார வெற்றி.

தாமரை வடிவிலான வானியல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது சீனா.

பிரான்ஸ் பிரதமராக பதவியேற்கப் போகும் தன்பாலின ஈர்ப்பாளர் கேப்ரியல் அட்டல்.

பாகிஸ்தானில் மேலும் ஒரு வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு.

பிரேசில்; சுற்றுலா மினி பஸ் – லாரி மோதி விபத்து – 25 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கானது ஜனவரி 10 அதாவது இன்று முதல் தொடங்குகிறது.

மும்பையில் நடைபெறும் ப்ரோ கபடி லீக் போட்டியில் இன்று தமிழ் தலைவாஸ் அணி உ.பி.யோத்தாஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான அர்ஜுனா விருதுகளை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Source link