தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை2, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக் கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 31.9 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 32.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு வட மாநிலங்களில் மட்டுமே பனிப்பொழிவு காணப்பட்டது. தமிழ்நாட்டில் இயல்பை விட குறைந்த அளவிலே பனிப்பொழிவு இருந்ததாக தனியார் வானிலை ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
накрутка пф позиций поведенческие факторы пф топ
услуга накрутки пф яндекс пф
накрутка ga яндекса услуга накрутки пдф в яндексе
over en casino de barcelona apuestas (Https://www.cerezasdenavaconcejo.es/)
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘தவிர்த்துகொள்ள வேண்டும்.!’- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?|Sengottaiyan spoke about MDMK; what was Durai Vaiko’s reaction? | ACTPnews.com

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா? | ACTPnews.com

குப்பை இருக்கும் இடம் தேடி… மதுரையை மாற்ற, களத்தில் இறங்கிய மாநகராட்சி ஆணையர் | Photo Album | ACTPnews.com

900 மாணவிகள்… மூன்றே கழிப்பறைகள்… தவிக்கும் புதுக்கோட்டை மாணவிகள்; முதல்வருக்கு கோரிக்கை | ACTPnews.com

Nepal Flood: உருக்குலைந்த நேபாளம்; பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு| live | Nepal flash flood live update | ACTPnews.com

накрутка пф сайта поведенческий фактор продвижение