Lok Sabha Election 2024 144 prohibitory order ahead of polling in Puducherry -TNN


நாடாளுமன்ற தேர்தல் 
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை (17.04.2024) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வடைந்ததற்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது. நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது. பிரச்சாரம் ஓய்ந்த உடன் நாளை மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும். மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்று நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
வாக்குப்பதிவை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்தல் செயல்முறைக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி மாவட்டத்தில், இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144 இன் கீழ் 17.04.2024 மாலை 6.00 மணி முதல் 20.04.2024 காலை 6.00 மணிவரை சட்டவிரோத கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம், பேரணிகள் நடத்துத தடை உத்தரவு பிறப்பித்து புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடந்தும் அதிகாரி குலோத்துங்கன் உத்தரவு. மேலும், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கும் இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அரசியல் நிர்வாகிகள், வேட்பாளர்கள், தேர்தல் பிரச்சாரம் செய்பவர்கள், பிரச்சாரப் பணியாளர்கள், போன்றவர்கள் தங்கள் தொகுதி அல்லாத வேறு தொகுதியில் தேர்தல் அல்லது கட்சி பணிக்காக தொடர்ந்து இருப்பது, தேர்தல் கருத்துக் கணிப்பு அல்லது கருத்துக்கணிப்பின் முடிவுகள் உட்பட தேர்தல் விவரங்களை மின்னணு ஊடகத்தில் வெளிப்படுத்துவது.
தேர்தல் விதிமுறை
வாக்குப்பதிவு நாளில் (19.04.2024) புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டருக்குள் கைபேசிகள், மைக்ரோஃபோன் போன்ற சாதனங்களை, பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு சட்டம் மற்றும் ஒழுங்கை அமலாக்குதல், தேர்தல் நடத்துதல் மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link