7 am headlines today 2024 6th February headlines news tamilnadu india world

தமிழ்நாடு:

உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளோம்: ஸ்பெயின் தமிழர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும், இரட்டை இலை சின்னத்தில்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி – ஓ.பன்னீர்செல்வம்
தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் துரை வைகோ வலியுறுத்தல்
அடையாறு, கூவம் கரையோரங்களில் விரைவில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
போதைப்பொருள் பறிமுதல் வழக்குகளை கண்காணிக்க இந்தியாவிலேயே முதன்முறையாக அதிகாரிகள் நியமனம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
இமாச்சல பிரதேசத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி, காணாமல் போன அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியா: 

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட அரசு பொதுத் தேர்வுகளின் வினாத் தாள்களை கசிய விடுவோருக்கும் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபடுவோருக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 
ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி
அமைச்சர்கள் மீதான வழக்குகளை யார் விசாரிப்பது? உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பொறுப்பு – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
மக்களவையில் நேற்று பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மிக கடுமையாக விமர்சித்தார்.
எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரையில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை: மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்
 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லக்னோ சிறையில் 63 கைதிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

உலகம்: 

சிலியில் காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை 122 ஆக உயர்வு, நூற்றுக்கணக்கோர் மாயம்.
சாதாரண கைதிகளை போல இம்ரான்கான் சிறையில் வேலை செய்ய உத்தரவு.
மாலத்தீவில் இருந்து இந்திய படையின் முதல் குழுவினர் அடுத்த மாதம் வெளியேறுவர் – அதிபர் முய்சு.
பாகிஸ்தான்: போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 10 போலீசார் உயிரிழப்பு.
ரஷ்ய ஹெலிகாப்டர் பயிற்சியின்போது ஏரியில் விழுந்து விபத்து. 

விளையாட்டு: 

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல் 
106 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி: 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு பதிலடி
ப்ரோ கபடி லீக்: உபி யோதாஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி இன்று களமிறங்குகிறது.
ஜனவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருது – பரிந்துரை பட்டியலில் ஷமர் ஜோசப் பெயர் இடம் பெற்றுள்ளது. 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல்: இந்திய அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 52.77 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. 55 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது. 

Published at : 06 Feb 2024 07:05 AM (IST)

மேலும் காண

Source link