தென்னிந்திய சினிமாவில் பெண்களை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த சமூகத்தில் நடைபெறும் பல ஸ்டீரியோடைப் அவலங்களை உடைத்து முன்னேற வழிகாட்டியாக அமைந்துள்ளது.
பெரும்பாலும் ரொமான்டிக் படங்களாக நடித்து வந்த ஹீரோயின்கள் பலரும் வுமன் சென்ட்ரிக் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அதன் மூலம் அவர்கள் தங்களின் நடிப்பு திறமையை வேறு ஒரு பரிணாமத்தில் வெளிக்காட்ட முடிகிறது. வரலாற்று திரைப்படங்கள் முதல் திரில்லர் திரைப்படம் வரையிலும் தமிழ் சினிமாவில் வெளியான எந்தெந்த வுமன் சென்ட்ரிக் திரைப்படங்கள் இந்த மகளிர் தினத்தன்று பார்க்கலாம்:
மகாநடி :
நாக் அஸ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா ரூத் பிரபு, விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான ‘மகாநடி’ படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவரின் பயணத்தை எப்படி தன்னம்பிக்கை மற்றும் வலிமையோடு போராட்டங்களை எதிர்கொண்டார் என்பது அழகாக படமாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.
கார்கி :
கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் நடிப்பில் 2022ம் ஆண்டு த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் ஒரு குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து வெளியானது. இப்படத்தின் திடுக்கிடும் கதைக்களம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.
யசோதா :
ஹரீஷ் நாராயண், கே. ஹரி சங்கர் இயக்கத்தில் சமந்தா ரூத் பிரபு, உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் ஜானரில் வெளியான ‘யசோதா’ திரைப்படம் ஒரு வாடகை தாய் எதிர்கொள்ளும் போராட்டங்களை சுற்றிலும் கதை நகர்கிறது. சமந்தாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
அம்மு :
சாருகேஷ் சேகர் இயக்கத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, நவீன் சந்திரா, பாபி சிம்ஹா நடிப்பில் க்ரைம் திரில்லர் ஜானரில் 2022ம் ஆண்டு வெளியான இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
சாணி காயிதம் :
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் பழிவாங்கும் ஒரு கதைக்களத்துடன் 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சாணி காயிதம் ‘. மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு சிறப்பாக நடித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
உயரே :
மனு அசோகன் இயக்கத்தில் பார்வதி திருவோடு, டோவினோ தாமஸ், ஆசிப் அலி நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான உயரே திரைப்படம் பைலட்டாக ஆசைப்படும் ஒரு பெண் அவளுடைய காதலனால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு பாதிக்கப்படுகிறாள். அந்த பெண்ணை சுற்றிலும் நகரும் கதைக்களத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே :
விபின் தாஸ் இயக்கத்தில் தர்ஷனா ராஜேந்திரன், பாசில் ஜோசப், மஞ்சு பிள்ளை நடிப்பில் 2022ம் ஆண்டு நகைச்சுவை ஜானரில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கண்டு ரசிக்கலாம்.
பொன்மகள் வந்தாள் :
ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான படம் ‘பொன்மகள் வந்தாள்’. பெண்களின் உரிமைகளை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் காணலாம்.
மேலும் காண