Nitin Gadkari says eliminating petrol, diesel vehicles its100% possible in india | பெட்ரோல் -டீசல் இல்லா வாகனககளின் பயன்பாடுகளை 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும்


இந்தியாவில் பெட்ரோல் -டீசல் இல்லா வாகனகங்ளின் பயன்பாடுகளை 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும் என்பது சாத்தியம் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
பசுமை வாகனங்கள்
உலகில் அதிகளவில் வாகனங்கள் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. கார், பைக், ஆட்டோ என்று அவற்றின் பயன்பாடுகள் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வாகனங்கள் இயங்குவதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் அத்தியாவசியமாக உள்ளது. 
இந்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல் -டீசல் வாகனங்களின் பயன்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பசுமை வழியிலான வாகனங்களை கொண்டுவருவது நிச்சயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
பசுமை வாகனம் பயன்பாடு குறித்து பேசிய நிதின் கட்காரி, இது 100 சதவிகிதம் ஏற்படுத்த முடியும். 2004 ஆம் ஆண்டு முதல், பெட்ரோல்-டீசல் எரிபொருளுக்கு மாற்று எரிபொருளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், வரும் 5 முதல் 7 ஆண்டுகளில் நிலைமை மாறும் என்றும் அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

100 சதவிகிதம் முடியும்:
 அப்போது, பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை முற்றிலுமாக ஒழிப்பது இந்தியாவால் சாத்தியமா என செய்தியாளர்கள் கேட்டபோது,  “நூறு சதவீதம் முடியும். இது கடினம்தான், ஆனால் சாத்தியமற்றது அல்ல என்பது என்னுடைய பார்வை என தெரிவித்தார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களை முற்றிலுமாக ஒழித்து நாட்டை பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதே தனது நோக்கம்.
இந்தியா பெட்ரோல்-டீசல் எரிபொருள் இறக்குமதிக்காக ₹16 லட்சம் கோடி செலவிடுகிறது. பெட்ரோ- டீசல் எரிபொருள்களை நிறுத்துவதன் மூலம்,  இந்த பணத்தை விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாம். கிராமங்கள் செழிப்பாக இருக்கும், இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
வரி குறைப்பு
பசுமை வாகனங்களுக்கான வரி குறைப்பு குறித்து பேசுகையில், ஹைப்ரிட் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி ஐந்து சதவீதமாகவும், ஃப்ளெக்ஸ் என்ஜின்களுக்கு 12 சதவீதமாகவும் குறைக்கும் திட்டம் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் செயல்பாடு:
பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ போன்ற ஆட்டோ நிறுவனங்களும் ஃப்ளெக்ஸ் என்ஜின்களைப் பயன்படுத்தி இருசக்கர மோட்டார் வாகனங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன. “நான் ஹைட்ரஜனில் இயங்கும் காரில்தான் பயணித்து வருகிறேன். மேலும், பல வீடுகளிலும் எலெக்ட்ரிக் கார்களைப் பார்க்கலாம். இது சாத்தியமற்றது என்று சொல்லியவர்கள், இப்போது தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.
டாடா மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய நிறுவங்கள் ஹைட்ரஜனில் இயங்கும் டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எல்என்ஜி/சிஎன்ஜியில் இயங்கும் லாரிகள் உள்ளன. பயோ-சிஎன்ஜியில் 350 தொழிற்சாலைகள் நாடு முழுவதும் உள்ளன.  ஒரு புரட்சி நடைபெறுகிறது. எரிபொருள் இறக்குமதி முடிவுக்கு வந்து, இந்திய நாடு தன்னிறைவு பெறும் என்று உறுதியாக நம்புகிறேன் என சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

Car loan Information:Calculate Car Loan EMI
மேலும் காண

Source link