MS Dhoni Explains Reason Behind Jersey Number 7 watch video ipl 2024 csk


 
ஐபிஎல் 2024:
இந்திய கிரிக்கெட் அணிக்காக சர்வதேச ஒரு நாள் உலககோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பைகளை வென்றுகொடுத்தவர் எம்.எஸ்.தோனி. கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே இந்தியாவில் நடைபெற்று வரும் லீக் போட்டிகளில் ஒன்றான ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்திருக்கிறார். இதனிடையே இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் விளையாட இருக்கும் தோனி பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
7-ம் எண் ஜெர்சியை அணிந்தது ஏன்?
இந்நிலையில் , எம்.எஸ்.தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது அந்த கேள்வி என்னவென்றால், நீங்கள் அணியும் நம்பர் 7 எண் ஏன் உங்களுக்கு முக்கியம்? இத்தனை மணிக்குள் வீட்டிற்கு வரவேண்டும் என உங்கள் பெற்றோர் கூறிய நேரமா அது? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது அதற்கு பதிலளித்த தோனி, “இல்லை. நான் இந்த உலகிற்கு வருவேன் என எனது பெற்றோர் முடிவு செய்த நாள்தான் 7.

Just Thala Dhoni being Thala Dhoni !! 😂❤️#MSDhoni #WhistlePodu #Dhoni @msdhoni 🎥 via @/single.id pic.twitter.com/Y68CqES6h3
— TEAM MS DHONI #Dhoni (@imDhoni_fc) February 10, 2024


நான் ஜூலை 7 ஆம் தேதி பிறந்தேன். மேலும், 1981 ஆம் ஆண்டை பிறந்த ஆண்டாக கருதினாலும் கூட 8-1 என்பது 7 என்பதையை குறிக்கிறது. அதேபோல், ஜூலை மாதம் என்பது ஆண்டின் 7 வது மாதமும் கூட. அதனால் வெளியில் எந்த எண் வேண்டும் என யாராவது கேட்டால் 7 என்று சொல்வதற்கு மிகவும் எளிதாக இருந்தது” என்று தோனி கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண் 10 க்கு ஓய்வு அளிக்கப்பட்ட சூழலில், இந்திய அணிக்காக தோனி செய்த சாதனைகளை அடுத்து தோனியின் ஜெர்சி எண் 7-க்கும் அண்மையில் பிசிசிஐ ஓய்வு அளித்தது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் படிக்க: ICC Trophy: 9 மாதத்தில் 3 முறை! சாம்பியன் மகுடத்தை தொடர்ந்து தவறவிடும் இந்தியா!
 
மேலும் படிக்க:Harjas Singh: ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து தடம்.. இந்திய அணியின் தோல்விக்கு காரணமே மற்றொரு இந்தியன்தான்..
 

மேலும் காண

Source link